மாட்டிறைச்சி வளையங்கள்
மாட்டிறைச்சி வளையங்கள் (Beef rings) என்பது ஆறு முதல் இருபத்து நான்கு பண்ணைகளைக் கொண்ட கூட்டுறவுக் குழுக்கள் ஆகும். இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் கோடைக் காலத்தில் ஒரு விலங்கை இறைச்சிக்காக தரவேண்டும் (இறைச்சி அந்த பண்ணையிலோ அல்லது இறைச்சி கூடத்திலோ அந்த உறுப்பினர் செலவிலோ வெட்டப்படும்).
20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வடஅமெரிக்க விவசாயிகளிடம் மாட்டிறைச்சி வளையங்கள் புழக்கத்தில் இருந்தது, ஏனென்றால் அவர்களிடம் எந்த குளிர்பதனமிடும் முறைகள் இல்லை. பன்றிகள் சிறிதாக இருந்தாலும் புகையால் பதப்படுத்தப்பட்ட பன்றி உடலை அது கெட்டுப்போவதற்குள் ஒரு குடும்பத்தாலே அதை உண்டுவிட முடியும், ஆனால் கால்நடைகளை பொருத்தவரையில் அப்படி இல்லை, புகைபிடித்த அல்லது உப்பிடப்பட்ட மாட்டிறைச்சி எந்த விதத்திலும் புகழ் பெற்றது இல்லை[1]
இறைச்சிக் கூடத்திலிருந்து கிடைக்கபெற்றவுடன், இறைச்சி கூட்டுறவில் உள்ள அங்கத்தினருக்கு விநியோகிககப்படும், ஒவ்வொறு வாரமும் சதைப்பகுதியையோ, வறுத்த துண்டோ அல்லது கொதிக்கின்ற மூட்டு பகுதியோ தரப்படும். ஒவ்வொரு மிருகமும் வரிசையாக இறைச்சிக்காக வெட்டப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் புதிய இறைச்சி கோடைக்காலம் முழுவதும் கிடைத்ததா என்று கூட்டுறவு சங்கம் உறுதிபடுத்துகிறது. விநியோகிக்கப்பட்டவை, எடை பார்க்கப்படுகிறது அதனால் நியாயமான பங்கு அனைவருக்கும் கிடைக்கிறது.[2]
குளிர்விக்கும் முறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, விவசாயிகளின் அதிக பொருளாதார வளர்ச்சி, அதிக சுதந்திரம் மற்றும் இறைச்சி கூடத்திலிருந்தோ, பதப்படுத்தியோ வைத்திருப்பதற்கு பதில் கறிகடைகளில் இருந்தே விவசாயிகளால் கறி வாங்கும் திறன் போன்ற பல்வேறு காரணங்களால் மாட்டிறைச்சி வளையங்கள் இல்லாமல் போனது.