மாணிகள் என்போர் கோயில் வழிபாட்டில் உதவியாளராக உள்ளவர்கள் ஆவர். இவர்கள் கோயில் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர். [1]

உதவியாளர்

தொகு

கோயிலில் திருமேனி தொட்டு வழிபாடு செய்யும் சிவப் பிராமணர்களுக்கு உதவியாளராக அமைக்கப்பெறும் பிரமச்சரிய பிராமணர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணிகள், மாண் என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளனர். [2]
'திருப்பரிசாரகஞ்செய்யும் மாணிகள்'
'திருப்பரிசாரகங்செய்யும் மாண் ஒன்று'

இவர்கள் கோயிலில் செய்யும் பணி பரிசாரகம் என்று பெயர் பெறும். [2]

திருவலஞ்சுழிக் கல்வெட்டு

தொகு

சிவன் கோயில்களில் மாணிகள் செய்யும் பணிகள் இவை என்பதைத் திருவலஞ்சுழிக் கல்வெட்டு கீழ்க்கண்டவாறு தெளிவாக உணர்த்துகிறது. [2]
'திருமஞ்சன நீரட்டியும் திருவிளக்குத்
தூண்டியும், பரிவாரம் ஆராதிச்சும்
திருவமிர்திட்டும், திருமேனி வடிச்சும்
மற்றும் இக்கோயிலுக்க வேண்டும்
பணி செய்யும் மாணிகள்'

மேற்கோள்கள்

தொகு

<references>

  1. Tamil Virtual University
  2. 2.0 2.1 2.2 கரந்தை கோவிந்தராசனார், தமிழகத்தில் கோயில் அமைப்பு, மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிகள்&oldid=1794985" இலிருந்து மீள்விக்கப்பட்டது