மாண்டியா பல்கலைக்கழகம்

மாண்டியா பல்கலைக்கழகம் (Mandya University) இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் அமைந்துள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2][3]

மாண்டியா பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்2019
துணை வேந்தர்புட்டாராஜூ
அமைவிடம், ,
இணையதளம்www.mandyauniversity.ac.in

வரலாறு

தொகு

கிராமப்புற மக்களுக்கு உயர்கல்வியை வழங்குவதற்கான பரந்த பார்வையுடன், 1948ஆம் ஆண்டு மாண்டியாவில் ஒரு இடைநிலைக் கல்லூரியாக அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1990-1991ஆம் ஆண்டில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரந்தர இணைப்பு பெற்றது. இக்கல்லூரியினை மேம்படுத்தப் பொதுமக்கள் பங்களிப்புகள் மற்றும் நன்கொடைகள் மைசூர்-பெங்களூரு பிரதான சாலையில் நகரின் மேற்கு முனையில், 31.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. 1952ஆம் ஆண்டு ஜெயச்சாமராஜேந்திர உடையாரால் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அரசாங்கத்தின் பொதுக் கொள்கையின்படி 1961ஆம் ஆண்டு கர்நாடகாவில் கல்லூரிக் கல்வியின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இக் கல்லூரி வந்தது. 1963ஆம் ஆண்டில், கல்லூரி பட்டப் படிப்புகளை உள்ளடக்கியதாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இக்கல்லூரி 1992ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 2எப் மற்றும் 12பி தகுதியினைப் பெற்று, 2005-06 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற கல்லூரியாகத் தரம் உயர்ந்தது. 2005-ல் பெங்களூருவில் உள்ள தேசிய தரச்சான்று அவையின் "பி+" தரத்துடன் தரத்தினையும் 2010ஆம் ஆண்டில் 3.11 மொத்த தரப்புள்ளியுடன் "ஏ" தரத்தினைப் பெற்றது. மீண்டும் இந்நிறுவனம் 2016ஆம் ஆண்டில் 3.22 மொத்த தரப்புள்ளிகளுடன் “ஏ” தர அங்கீகாரம் பெற்றுள்ளது (3வது சுழற்சி).

2019ஆம் ஆண்டு மாண்டியா பல்கலைக்கழகமாக மாண்டியா அரசுக் கல்லூரி அங்கீகாரம் பெற்றது. வளர்ச்சி காரணிக்காக மாண்டியா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்காகச் சிறப்பு அதிகாரி முனைவர் எம். எசு. மகாதேவ நாயக்கை அரசு நியமித்தது.

துறைகள்

தொகு

மானுடவியல்

தொகு
  • கன்னடம்
  • இந்தி
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • சமூகவியல்

அறிவியல்

தொகு
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புவியியல்
  • கணினி அறிவியல்
  • உளவியல்

வணிக நிர்வாகவியல்

தொகு

உடற்கல்வியியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "State Universities Karnataka". University Grants University. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
  2. "Mandya varsity to be developed as model institution ." Deccan Herald. 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
  3. "Maharani's is now a cluster university". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 January 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டியா_பல்கலைக்கழகம்&oldid=3742525" இலிருந்து மீள்விக்கப்பட்டது