மாதிரி தயாரித்தல்
மாதிரி தயாரித்தல் (Sample preparation) என்பது பகுப்பாய்வு வேதியியலில் மாதிரி அதன் பகுப்பாய்வுகளுக்கு முன் தயார் செய்யப்படும் வழிகளைக் குறிக்கிறது. பெரும்பாலான பகுப்பாய்வு நுட்பங்களில் தயாரிப்பு என்பது மிக முக்கியமான படியாகும். ஏனென்றால் நுட்பங்கள் பெரும்பாலும் பகுப்பாய்வுக்கு அதன் உள்ளிருப்பு வடிவத்தில் பதிலளிக்காது, அல்லது முடிவுகள் அதன் அமைப்புத் தலையிடுவதன் மூலம் சிதைக்கப்படுகின்றன. மாதிரி தயாரிப்பில் கலைத்தல், பிரித்தெடுத்தல், சில இரசாயனங்களுடன் எதிர் வினையாற்றல், துளைத்தல், கொடுக்கிணைத்தல் காரணியுடன் வினை புரிதல் (எ. கா. எத்திலீன்டையமீன்டெட்ராஅசிட்டிக் காடி) மறைக்கும் முகவர், வடிகட்டுதல், நீர்த்தல், துணை மாதிரியெடுத்தல் உள்ளிட்ட பல நுட்பங்கள் அடங்கும். குறிப்பிட்ட பகுப்பாய்வு உபகரணங்கள் மூலம் பகுப்பாய்விற்குத் தயாராக ஒரு வடிவத்தில் மாதிரியைத் தயாரிக்க ஒரு சில நிலைக்கு உட்படுத்தப்படுகிறது.[1][2]
மாதிரி தயாரிப்பில் பின்வருவன அடங்கும்:
- நொறுக்குதல்
- கரைத்தல்
- அமிலம் அல்லது காரத்துடன் இரசாயனச் செரிமானம்
- பிரித்தெடுத்தல்
- சுத்தம் செய்தல்
- முன் செறிவூட்டல்.
மேற்கோள்கள்
தொகு- "Sample Preparation". பார்க்கப்பட்ட நாள் 2007-11-09.