மாதிரி வடிவம் உருவாக்குதல்

மாதிரி வடிவம் உருவாக்குதல் (Mathematical modelling) என்பது கணிதம் மற்றும் அதன் தொடர்பான பண்புகள், கலப்பெண்ணின் வடிவம் பற்றிய எண்முறையே ஆகும்.

வரையறை

தொகு

செய்முறையை பயன்படுத்தி கணினிமயமான கணிதத்தின் மாதிரி மூலமாக உண்மையான தீர்மானத்தை சந்தேகத்தின் அடிப்படையில் உருவாக்குதலே மாதிரி வடிவம் உருவாக்குதலாகும்.மாதிரி வடிவம் உருவாக்குதலில் கலப்பெண் மூலமாக வரும் பிரச்சனைகளுக்கு தொடர் வரிசையாகவும், பொருள்களை கையாளுவதன் மூலமாகவும் தீர்மானம் எடுக்க வேண்டும்.

மாதிரி வடிவம் உருவாக்குதல் விரிவாக்கத்தை கீழ்க்கண்டவாறு ஷானான் தெரிவித்துள்ளார் :

மாதிரி வடிவம் உருவாக்குதல் என்பது ஒரு மாதிரியை உருவாக்கி அதன் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பது ஆகும்

மாதிரி வடிவம் உருவாக்குதலின் காரணம்

தொகு

மாதிரி வடிவம் உருவாக்குதல் முறையை பயன்படுத்தி ஆய்வாளர்கள் மாறிகள் மற்றும் மாறிலிகளை பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தி தரப்படுத்தப்பட்ட அளவை பயன் தரக்கூடியவாறு கீழ்க்கண்ட பட்டியல் மூலமாக விவரிக்கிறார்;

(1) தக்க கருவிகளை பன்படுத்தி ஒரு ஆய்வின் உண்மை அமைப்பின் பிரச்சனைகளை தீர்க்க

  • உடையக்கூடிய
  • விலைமதிப்பற்ற
  • எதிர்க்கும் தன்மையுடைய
  • மாறிகளை கட்டுப்படுத்த முடியாதவாறு அமைய வேண்டும்.
  • )தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு கணிதம் மூலமாக தீர்வு காண இம்முறையே பெரிதும் வரவேற்கப்படுகிறது.

மாதிரி வடிவம் உருவாக்குதல் முறையை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது.
  • ஒரு ஊகம் இல்லாமல் ஒரு தீர;மானம் எடுக்கமுடியாது.எனவே இம்முறை பெரிதும் கையாளப்படுகிறது.
  • மற்ற அமைப்புகளை விட விலை குறைந்தது.
  • கால விரயம் ஆகிறது.

நன்மைகள்

தொகு
  • மிகவும் சிக்கலான அமைப்பை பற்றிப் படிப்பதற்கு மாதிரி வடிவம் உருவாக்குதல் உதவியாக உள்ளது.
  • மாதிரி வடிவம் உருவாக்குதலின் உதவியால் முடிவை ஆராய முடிகிறது.
  • மாதிரி வடிவம் உருவாக்குதல் முறையானது எளிய முறையில் பகுப்பாய்வு செய்வதற்கு உதவுகிறது.
  • இம்முறையானது சிறந்த முறையில் அமைப்பை உருவாக்கவும், வடிவமைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறைபாடுகள்

தொகு
  • மாதிரி வடிவம் உருவாக்குதல் தீர்வை மதிப்பீடு செய்வதற்கான வழியை உருவாக்குகிறது. ஆனால் இது தீர்வுக்கான உத்தியை உருவாக்குவதில்லை.
  • மாதிரி வடிவம் உருவாக்குதல் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்கிறது.
  • மாதிரி வடிவம் உருவாக்குதலின், ஒரு பிரச்சனையை பல முறை சோதனை செய்யும் போது இது பலவிதமான தீர்வைத் தருகிறது. எனவே இதிலிருந்து இம்முறை தெளிவான ஒரே தீர்வைத் தருவதில்லை என அறிய முடிகிறது.
  • மாதிரி வடிவம் உருவாக்குதலின், இம்முறை மட்டும் தனித்து பதிலைக் கொடுப்பதில்லை.
  • எல்லா சூழ்நிலைகளிலும் இம்முறையைப் பயன்படுத்தி தீர்வைக் காண இயலாது.

நடைமுறைப் பயன்கள்

தொகு

மாதிரி வடிவம் உருவாக்குதல் உண்மையான, பலவேறுபட்ட திறனுடைய கருவியாக உள்ளது. மாதிரி வடிவம் உருவாக்குதல் கல்வி, வணிகம் என்று பல துறைகளிலும் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இம்முறை பொது நிதி மற்றும் ஆயுள் காப்பீட்டில் வரும் செய்முறை பிரச்சனைகளுக்கு உதவுகிறது. மாதிரி வடிவம் உருவாக்குதல் என்பது கடினமான செயல்முறைகளை எளிதில் செய்து முடிக்கவும், புரிந்து கொள்ளவும், பிழைகளை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.