மாது மாது
மாது மாது எனத் தொடங்கும் பாடலுடன் விளையாடப்படும் இது ஒரு சிறுமியர் விளையாட்டு.
ஆடும் முறை
தொகுகெட்டியான தரையில் ஒரு வட்டம் வரையப்படும். அந்த வட்டத்தில் 10 குழிகளும் வட்டத்தின் நடுவில் 4 குழிகளும் உருவாக்கப்படும். பட்டவரின் கண்கள் பொத்தப்படும். முன்பே பட்டவருக்குக் காட்டப்பட்ட புளியங்கொட்டை போன்றதொரு அடையாளப் பொருளை மற்றொருவர் ஒரு குழியில் மறைந்து வைப்பார். பட்டவரின் கண்கள் திறந்து விடப்படும்.
எந்தக் குழியில் அடையாளப் பொருள் உள்ளது எனச் சொல்லி அதனை எடுத்துத் தரவேண்டும். 3 வாய்ப்புகள் தரப்படும். அதற்குள் கண்டுபிடிக்காவிட்டால் மீண்டும் கண் பொத்தப்படுவார். கண்டுபிடித்துவிட்டால் அவர் மற்றவர் கண்களைப் பொத்தலாம்.
- மறைக்கும்போது பாடும் பாடல்
- மாது மாது மன்னந்தம்பி
- கோது கோது கொழுந்து வெற்றிலை
- ஆத்தாளோ அக்காளோ காட்டிக் கொடுத்தால்
- தூஉ ...
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980