மாந்தை (சேரர் துறைமுகம்)

மாந்தை சங்க காலத்தில் இருந்த ஒரு ஊர். இந்த ஊர் மரந்தை என்னும் பாடமும் கொண்டுள்ளது. (நெடிலுக்குக் கால் வாங்கும் எழுத்தை 'ர' என்றும் படித்தனர். இதனால் நேர்ந்த வேறுபாடுகளே இவை).

மாந்தை நகரில் இருந்துகொண்டு ஆண்ட சேரனை 'மாந்தரன்' என்றனர்.

  • கடலலை பெயர்ந்து வரும்போது நாரைகள் கூட்டமாகப் பறந்துவந்து அயிரை மீன்களை உண்டு களிக்கும் ஊர் மாந்தை. [1]
  • மாந்தை நகரின் அரசன் குட்டுவன். மாந்தையின் கடலோரக் கானலில் யானைகள் கூட்டம் கூட்டமாக மேயும்.[2]

மேற்கோள்

தொகு
  1. தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை; ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.(குறுந்தொகை 166)
  2. குட்டுவன் மரந்தை அன்ன எம் குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.(குறுந்தொகை 34)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தை_(சேரர்_துறைமுகம்)&oldid=2565094" இலிருந்து மீள்விக்கப்பட்டது