மானாங்கேணிக் கல்வெட்டு
மானாங்கேணிக் கல்வெட்டு என்பது, திருகோணமலையில் மானாங்கேணி என்னும் இடத்தில் அமைந்துள்ள வெள்ளை வில்வத்தடி கோணநாயகர் கோயிலில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டைக் குறிக்கும். 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் நிலத்தின் கீழிருந்து, மகாவிட்டுணு, பார்வதி ஆகிய கடவுட் சிலைகளும், நந்தியும், இக்கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டன.[1] இக்கல்வெட்டு முழுமையானது அல்ல. இது முழுக்கல்வெட்டின் மேற்பகுதி மட்டுமே. கீழ்ப்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 15 வரிகளில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இப்பகுதியையும் முழுமையாக வாசிக்க முடியாதவாறு சில இடங்களில் எழுத்துக்கள் சிதைந்துவிட்டன.
காலம்
தொகுஇதை முதலில் வாசித்த செ. குணசிங்கம் இதை சோழ இலங்கேசுவரன் காலத்துக்குரியதாக அடையாளம் கண்டுள்ளார். இது அவனுடைய ஏழாவது அல்லது எட்டாவது ஆட்சியாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[2]
உள்ளடக்கம்
தொகுஇக்கல்வெட்டில் திருகோணமலை சிறீ மத்ஸ்யகேஸ்வரம், ஈஸ்வரமுடையார் கோயில் என இரண்டு கோயில்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவற்றை வைத்து, திருகோணமலை மத்ஸ்யகேஸ்வரத்து மூலஸ்தானம் தொடர்பாகவும், வேறொரு ஈஸ்வரம் தொடர்பாகவும் செய்யப்பட்ட ஓர் ஏற்பாட்டினைப் பதிவு செய்வதற்காகவே இக்கல்வெட்டு எழுதப்பட்டதாகப் பத்மநாதன் கருதுகிறார்.[3]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.