மானாவூர்ப் பதிகம்
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி என்னும் நூலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் சமய திவாகர முனிவர் என்பவர் சமய திவாகர விருத்தி என்று கூறப்படும் உரைநூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்படும் நூல்களில் ஒன்று மானாவூர்ப் பதிகம் என்னும் நூல். [1] இந்த நூலின் காலம் 9 ஆம் நூற்றாண்டு. குண்டலகேசிக்கு முந்திய காலம். இந்த நூலின் இரண்டு பாடல்கள் அந்த உரை நூலில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன.
- 1
வான் நாடும் பலி ஆயும் அரிணம் ஆயும்
- வன் கேழல் களிறு ஆயும் எண்கால் புள்மான்
தான் ஆயும் பணை எருமை ஒருத்தல் ஆயும்
- தடக்கை இனம் களிறது ஆயும் சடங்கம் ஆயும்
மீன் ஆயும், முயல் ஆயும், அன்னம் ஆயும்
- மயில் ஆயும் புறவு ஆயும் வெல்லும் சிங்க
மான் ஆயும் கொலை களவு கள் பொழ் காமம் [3]
- வரைந்தவர் தாம் உரைந்த பதி மானாவூரே [4]
- 2
மிக்க தனங்களை மாரி மூன்றும் பெய்யும்
- வெங் களிற்றை மிகு சிந்தாமணியை மேனி
ஒக்க அரிந்து ஒருகூற்றை இரண்டு கண்ணை
- ஒளி திகழும் திருமுடியை உடம்பில் ஊனை
எக்கி விழும் குருதி தனை அரசு தன்னை
- இன் உயிர் போல் தேவியை ஈன்றெடுத்த செல்வ
மக்களை வந்து இரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்
- வானவர் தம் உறைபதி மானாவூரே [5]
இருப்பிடம்
தொகுமானாவூர் காஞ்சிபுரத்துக்குத் தெற்கே உள்ள மானாம்பதி உள்ள ஊர். இங்குப் புத்த சின்னங்கள் உள்ளன. [6]
புத்த சாதகக் கதைகள்
தொகுபுத்த சாதகக் கதைகளில் வரும் கதைகள் இப்பாடலில் உள்ளன.
- வானாடும் பரி - 196 ஆம் புத்த சாதகக் கதை - இலங்கைத் தீவில் அரக்கியர் கூட்டத்தவரால் கவரப்பட்ட வணிகர் குழுவைப் புத்தர் ஆகாச காமியான குதிரை வடிவுடன் சென்று வெளியேற்றி உய்வித்தார்.
- அரிணம்மான் மானிட உருவான கதை - 483 ஆம் புத்த சாதகக் கதை
- களிறு ஆயது - 455 ஆம் புத்த சாதகக் கதை
- மயில் ஆனது - 491 ஆம் புத்த சாதகக் கதை
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 305.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ புத்தரின் தருமங்கள் (பஞ்ச சீலக் கொள்கை)
- ↑ புத்தரின் பிறப்புகள் பற்றிக் கூறும் பாடல்
- ↑ புத்தரின் கொடை பற்றிக் கூறும் பாடல்
- ↑ மு. இராகவையங்கார் குறிப்பு