மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

மனிதரின் தன்மானத்துக்கு எதிரான தீவரமான தாக்குதல்கள், அவமதித்தல், அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவை தற்செயலாக, அல்லது அங்காங்கே நிகழும் நிகழ்வுகளாக அல்லாமல், ஒரு அரசின் கொள்கை முறையிலான அல்லது அரசால் அல்லது அதிகாரத்தை கட்டுப்படுத்துபவர்களால் சகிக்கப்படும் அல்லது ஆதரவைப் பெறும் செயற்பாடுகள். இவை பின்வரும் குற்றங்களை உள்ளடக்கும்:

  • கொலை
  • முழுமையாக அழித்தொழித்தல்
  • சித்திரவதை
  • பாலியல் வன்புணர்வு
  • அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்குமுறைகள்
  • பிற மனிதம் அற்ற செயற்பாடுகள்

ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மட்டுமே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள எனக் கணிக்கப்படும். தனித்தனியே நிகழும் இந்த செயற்பாடுகள், பாரிய மனித உரிமை மீறல்களாக அல்லது சந்தர்ப்பத்தைப் பொறுத்து போர் குற்றமாக கருதப்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Crimes against humanity, as defined by the Rome Statute of the International Criminal Court Explanatory Memorandum, "are particularly odious offences in that they constitute a serious attack on human dignity or grave humiliation or a degradation of one or more human beings. They are not isolated or sporadic events, but are part either of a government policy (although the perpetrators need not identify themselves with this policy) or of a wide practice of atrocities tolerated or condoned by a government or a de facto authority. Murder; extermination; torture; rape, political, racial, or religious persecution and other inhumane acts reach the threshold of crimes against humanity only if they are part of a widespread or systematic practice. Isolated inhumane acts of this nature may constitute grave infringements of human rights, or depending on the circumstances, war crimes, but may fall short of falling into the category of crimes under discussion." As quoted by Guy Horton in Dying Alive - A Legal Assessment of Human Rights Violations in Burma April 2005, co-Funded by The Netherlands Ministry for Development Co-Operation. See section "12.52 Crimes against humanity", Page 201. He references RSICC/C, Vol. 1 p. 360