மாம்பழத்துறையாறு அணை
மாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும். இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது. தமிழக அரசால் 2007ம் ஆண்டு ரூபாய் 20 கோடியே 97 லட்சம் செலவில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. [1]
மாம்பழத்துறையாறு அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | மாம்பழத்துறையாறு நீர்தேக்கம் |
அமைவிடம் | வில்லுக்குறி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு |
திறந்தது | 2010 |
அணையும் வழிகாலும் | |
வகை | நீர்தேக்கம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழகத்தில் கட்டப்பட்ட கடைசி அணை...!". Newstm தமிழ். 10 சனவரி 2019 இம் மூலத்தில் இருந்து 2021-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210123204207/https://newstm.in/tamilnadu/special-article/the-last-dam-in-tamil-nadu/c77058-w2931-cid302970-su6272.htm.