மாயேண்டன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 235. பாலைத்திணைப் பாடல்.

'பாம்பின் தூங்குதோல்'

பாடல் சொல்லும் செய்தி

தொகு

வாடைக்காற்று வீசும்போது இங்கு இருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.

பாம்பு உரித்த தோல் தோல் தொங்குவது போல அருவி தோன்றுகிறதே அங்குள்ள புல் வேய்ந்த குரம்பை வீட்டுக்குப் பக்கத்தில் உதிர்ந்து கிடக்கும் நெல்லிக்காயை மான்கூட்டம் தின்று வயிறாரும். (அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதான் என்னவள் இருப்பாள்.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயேண்டன்&oldid=3180098" இலிருந்து மீள்விக்கப்பட்டது