மாருதி கல்வியியல் கல்லூரி

மாருதி கல்வியியல் கல்லூரி 2007 ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்-சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவையான சதவீத மதிப்பெண்களுடன் யுஜி பட்டம் பெற்ற மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் 95% க்கும் அதிகமான முடிவுகளைத் தருகிறது, அவர்களில் 50% க்கும் அதிகமானோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்று உள்ளார்கள். 2013 - 2014 கல்வியாண்டில் கல்லூரி தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலால் "பி" தரத்துடன் அங்கீகாரம் பெற்றுள்ளது.

கல்லூரியில் இளநிலை கல்வியியல் புலன் (பி.எட்) மற்றும் கல்வி முதுநிலை கல்வியியல் புலன் (எம்.எட்) என இரு ஆசிரியர் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும் இளநிலை கல்வியியல் புலனில் 100 மாணவர்களும் முதுநிலை கல்வியியல் புலனில் 50 மாணவர்களும் கல்வி பயில அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாருதி கல்வி அறக்கட்டளை கல்விக் கட்டணத்தில் சலுகைகளை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியாக ஏழை மாணவர்களுக்கு உதவுகிறது. திறமையான மாணவர்களுக்கு அறக்கட்டளை விருதுகள் உதவித்தொகை மற்றும் முதலிடம் பெறுபவர்களுக்கு பண விருதுகள் வழங்கப்படுகின்றன, இது உயர் படிப்புக்கு உதவியாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக அறக்கட்டளை கிராமப்புற மக்களுக்கு கல்வித்துறையில் சேவை செய்ய உறுதிபூண்டுள்ளது. மாருதி கல்வி அறக்கட்டளை நடத்தும் பல்வேறு நிறுவனங்களில் கல்லூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்கள் பயன் அடைகிறார்கள்.


வெளி இணைப்பு

தொகு