மார்கரெட் தர்ன்புல்
மார்கரெட் கரோல் தர்ன்புல் (Margaret Carol Turnbull) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 2004 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் வாழத்தகும் கோள்கள் அமைந்த விண்மீன் அமைப்புகளிலும் இரட்டைச் சூரிய அமைப்புகளிலும் வல்லுனர் ஆவார்,[1] இவர் கோள் வாழ்தகவு காண்பதிலும் வல்லுனர் ஆவார்.
மார்கரெட் தர்ன்புல் Margaret Turnbull | |
---|---|
![]() உலக அறிவியல் விழாவில் தர்ன்புல், ஜூன் 2008 | |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | புறக்கோள் வாழ்தகவு |
இவர் 2002 இல் ஜில் டார்ட்டருடன் இணைந்து வாழ்தகவு கோள்கள் அட்டவணையை உருவாக்கினார்.[2] இது மாந்த வாழ்தகவு வாய்ப்புள்ள விண்மீன் அமைப்புகளின் அட்டவணை ஆகும்.[3] அடுத்த ஆண்டு 100 ஒளியாண்டுகளுக்குள் அமைந்த வாழ்தகவு விண்மீன் அட்டவணைப் பட்டியலில் இருந்த 5000 விண்மீன்களில் மிகவும் தகுதி வாய்ந்த 30 விண்மீன்களைத் தேர்வு செய்தார்.[3]
இவர் 2006 இல் ஒவ்வொன்றிலும் ஐந்து விண்மீன்கல் அமைந்த இரு வாழ்தகவு வாய்ப்புள்ள விண்மீன்களை குறும்பட்டியல்களை வெளியிட்டார்.[4] முதல் பட்டியலில் ஆலன் தொலைநோக்கி அணி உதவியால் சேதி கதிர்த்தேட்டங்களில் கண்டறிந்த விண்வமீன்கள் ஆகிய ([[பீட்டா கானும் வெனட்டிகோரம், எச். டி. 10307,எச். டி. 211415, 18 சுகார்ப்பி, 51 பெகாசி ஆகியன அடங்கும். இரண்டாம் பட்டியலில் தரை கோள்காணி கண்டறிந்த சிறந்த ஐந்து விண்மீன்கள் ஆகிய எப்சிலான் இண்டி, எப்சிலான் எரிதானி, [[40 எரிதானி, ஆல்பா சென்டாரி B, டௌ சேதி என்பன அடங்கும்.
தர்ன்புல்லை 2007 இல் CNN தொலைக்காட்சி "மதிநுட்பர்" என இவரது மிகவும் உயிர்தோன்றி அறிதிறன் நாகரிகம் நிலவ மிகவும் வாய்ப்புள்ள கோள்கள் உருவாக வல்ல விண்மீன்களின் அட்டவணையை உருவாக்கிய பணிக்காக பாராட்டியது.[5]
சிறுகோள் 7863 தர்ன்புல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ staffwriter (1 January 2004). "Gem Sorting for the Next Earth". Astrobiology Magazine. Archived from the original on 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ "HabStars: Speeding Up In the Zone". Astrobiology Magazine. 2003. Archived from the original on 4 October 2003. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ 3.0 3.1 "Stars and Habitable Planets". Archived from the original on 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ Lane, Earl (18 February 2006). "Astronomer Margaret Turnbull: A Short-List of Possible Life-Supporting Stars". American Association for the Advancement of Science. Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- ↑ Furman, Eric (13 July 2007). "Geniuses who will change your life". CNN. Archived from the original on 17 July 2010. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
வெளி இணைப்புகள்
தொகு- "Margaret Turbull personal page at University of Arizona". Archived from the original on 2 March 2007. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- Turnbull, Margaret. "TARGET SELECTION FOR SETI. I. A CATALOG OF NEARBY HABITABLE STELLAR SYSTEMS" (PDF). The Astrophysical Journal Supplement Series. pp. 181–198. Archived from the original (PDF) on 9 November 2006. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.
- Turnbull, Margaret (2004). "THE SEARCH FOR HABITABLE WORLDS: FROM THE TERRESTRIAL PLANET FINDER TO SETI" (PDF). PhD Thesis. University of Arizona, Department of Astronomy. Archived from the original (PDF) on 22 October 2007. பார்க்கப்பட்ட நாள் 28 September 2012.