மார்க் சீர்தரங்கள்

மார்க் சீர்தரங்கள் (MAchine-Readable Cataloging Standards (MARC) என்பது கணினி புரிந்து கொள்ளக்கூடிய பட்டியலாக்க சீர்தரம் ஆகும். 1960 கள் உருவாக்கப்பட்ட இந்த முறைமை இன்றும் பரவலான பயன்பாட்டில் உள்ளது. இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுவது கனடிய அமெரிக்க மார்க் சீர்தரங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட MARC 21 சீர்தரங்கள் ஆகும். MARC 21 ஒருங்குறிப் பயன்பாட்டை ஏதுவாக்கின்றன.

மார்க் (MARC)
கோப்பு நீட்சி.mrc, .marc
அஞ்சல் நீட்சிapplication/marc

மார்க் எசு.எம்.எல் (MARCXML)

தொகு

பரவலான பயன்பாட்டில் இருக்கும் எக்சு.எம்.எல் இசுகீமா ஆதரிக்கும் வகையில் மார்க் எசு.எம்.எல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மார்க் பதிவை மார்க் எசு.எம்.எல் தகவல் இழக்காமல் மாற்ற முடியும், மார்க் எசு.எம்.எல் பதிவை மார்க் பதிவாக தகவல் இழக்காமல் மாற்ற முடியும்.

எதிர்காலம்

தொகு

1960 காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட சீர்தரம் தற்போதைய புதிய தொழிநுட்பங்களுக்கும் இணையாக இல்லை என்று பலர் கருதுகின்றனர். எ.கா மார்க் பதிவுகள் தட்டையானவை (MARC), மாற்றாக புதிய எக்சு.எம்.எல் அடிப்படையிலான சீர்தரங்கள் படிநிலை சீர்தரங்களுக்கு எளிமையாக ஆதரவு தருகின்றன. மார்க் உருவாக்கப்பட்ட போது இன்று போல் தொடர்புசால் தரவுதளங்கள், இணையத் தொழில்நுட்பங்கள் இருக்கவில்லை. இதனால் மார்க் சீர்தரத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறன. இவற்றில் குறிப்பிடத்தக்கது காங்கிரசு நூலகத்தால் முன்னெடுக்கப்படும் Bibliographic Framework Initiative ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Bibliographic Framework Initiative
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_சீர்தரங்கள்&oldid=3286227" இலிருந்து மீள்விக்கப்பட்டது