மார்க் தெலாபோண்டைன்

சுவிட்சர்லாந்து வேதியியலாளர்

மார்க் தெலாபோண்டைன் (Marc Delafontaine) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். செலிக்னி நகராட்சியைச் சேர்ந்த இவர் 1837 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியன்று பிறந்தார். நிறமாலையியல் வல்லுநரான இவர் சில அருமண் தனிமங்களை கண்டுபிடித்து விவரிப்பதில் ஈடுபட்டார்.

மார்க் தெலாபோண்டைன்
மார்க் தெலாபோண்டைன் Marc Delafontaine
பிறப்புமார்ச்சு 31, 1837 அல்லது 1838
செலிக்னி, சுவிட்சர்லாந்து
தேசியம்சுவிட்சர்லாந்து
பணியிடங்கள்செனீவா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஓல்மியம்

வாழ்க்கை

தொகு

செனீவா பல்கலைக்கழகத்தில் மற்றொரு வேதியியலாரான யீன் சார்லசு கலிசார்டு டி மரினாக்குடன் தெலாபோண்டைன் படித்தார். இப்பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றியும் உள்ளார் [1] . அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இவர் 1870 ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு வந்து சேர்ந்தார் [2]. பின்னர் அந்நாட்டின் குடிமகனாக ஆனார் [1]. இலினொய் மாநிலத்தின் சிகாகோ நகரத்தில் நகர உயர்நிலைப் பள்ளியிலும் மகளிர் கல்லூரியிலும் கற்பித்தார். சிகாகோ நகர காவல் துறையில் பகுப்பாய்வு வேதியியலாளராகவும் பணியாற்றினார்.

ஆராய்ச்சி

தொகு

ஓல்மியம்

தொகு

1878 ஆம் ஆண்டில் யாக்-லூயிசு சோரெட்டுடன் சேர்ந்து, தெலாபோண்டைன் முதன்முதலில் நிறமாலையியல் ஆய்வுகளில் ஓல்மியம் தனிமத்தைக் கண்டுபிடித்தார் [3]. 1879 ஆம் ஆண்டில், பெர் தியோதர் கிளீவ் அதை வேதியியல் ரீதியாக தூலியம் மற்றும் எர்பியத்திலிருந்து பிரித்தெடுத்தார். எனவே இத்தனிமத்தின் கண்டுபிடிப்பு மூன்று மனிதர்களுக்கும் பொதுவானதாகும் [1].

இட்ரியம், டெர்பியம், எர்பியம்

தொகு

1843 ஆம் ஆண்டில் கார்ல் குசுடாப் மொசாண்டர் டெர்பியம் மற்றும் எர்பியம் தனிமங்களை இட்ரியம் ஆக்சைடு எனப்படும் இட்ரியா கனிமத்திலிருந்து கண்டுபிடித்தார் [4]:38[2]:701[5][6] [7]. இருப்பினும் இந்த கண்டுபிடிப்பு ஒரு பரபரப்பான போட்டிக்கு உள்ளானது. நிறமாலையியல் வல்லுநர் நில்சு யோகான் பெர்லின் அவ்விரண்டு தனிமங்களும் இருப்பதை மறுத்தார், எர்பியா என்ற கனிமம் இருப்பதை உறுதிப்படுத்தத் தவறினார். அதன் பெயரை டெர்பியாவுக்குப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார் [8] . 1864 ஆம் ஆண்டில் தெலாபோண்டைன் இட்ரியம், டெர்பியம் மற்றும் எர்பியம் ஆகியவை தனித்தனி தனிமங்கள் என்பதை நிருபிக்க ஒளியியல் நிறமாலை ஆய்வைப் பயன்படுத்தினார் [8]. இருப்பினும் முரண்பாடான பெயர்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட குழப்பம் தொடர்ந்தது. மொசாண்டர் முன்மொழிந்த பெயர்கள் மாற்றப்பட்டன. ஊதாவண்ண கல்லுக்கு எர்பியம் ஆக்சைடு என்ற பெயரையும், மஞ்சள் நிறப் பொருளுக்கு டெர்பியம் ஆக்சைடு என்ற பெயரும் கொடுக்கப்பட்டது [9][10][7][8].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Fontani, Marco; Costa, Mariagrazia; Orna, Mary Virginia (2014). The Lost Elements: The Periodic Table's Shadow Side. Oxford University Press. p. 119–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199383344.
  2. 2.0 2.1 Weeks, Mary Elvira (1956). The discovery of the elements (6th ed.). Easton, PA: Journal of Chemical Education.
  3. Thornton, Brett F.; Burdette, Shawn C. (20 May 2015). "Homely holmium". Nature Chemistry 7 (6): 532. doi:10.1038/nchem.2264. பப்மெட்:25991534. 
  4. Tansjö, Levi (December 6, 2012). "Carl Gustaf Mosander and His Research on Rare Earths". In Evans, C. H. (ed.). Episodes from the History of the Rare Earth Elements. Springer Science & Business Media. pp. 38–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789400902879.
  5. Mary Elvira Weeks (1932). "The discovery of the elements: XVI. The rare earth elements". Journal of Chemical Education 9 (10): 1751–1773. doi:10.1021/ed009p1751. Bibcode: 1932JChEd...9.1751W. 
  6. Marshall, James L.; Marshall, Virginia R. (October 31, 2014). "Northern Scandinavia: An Elemental Treasure Trove". Science history : a traveler's guide. Vol. 1179. ACS Symposium Series. pp. 209–257. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/bk-2014-1179.ch011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780841230200.
  7. 7.0 7.1 Piguet, Claude (21 March 2014). "Extricating erbium". Nature Chemistry 6 (4): 370. doi:10.1038/nchem.1908. பப்மெட்:24651207. 
  8. 8.0 8.1 8.2 Friend, John Newton (1917). A Text-book of Inorganic Chemistry. Vol. 4. Griffin & Company. pp. 221–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781130017649.
  9. Holden, Norman E. (2001-06-29). History of the Origin of the Chemical Elements and Their Discoverers. Upton, New York: Brookhaven National Laboratory (BNL). https://www.osti.gov/servlets/purl/789650. 
  10. Krishnamurthy, Nagaiyar (December 16, 2015). Extractive metallurgy of rare earths (2nd ed.). CRC Press. pp. 5–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781466576346.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_தெலாபோண்டைன்&oldid=4041284" இலிருந்து மீள்விக்கப்பட்டது