மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்

மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் (Martha's Vineyard, உள்ளகப் பெயர்: நோப்பெ) மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட் முனைக்குத் தெற்கே உள்ள தீவு ஆகும். இது வசதி மிக்கோருக்கான கோடைக்கால குடியேற்றமாக மிகவும் அறியப்பட்டுள்ளது. இதில் சிறிய சப்பாக்கிடிக் தீவும் அடங்கும்; இது பொதுவாக பெரிய தீவுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் சூறாவளிகளாலும் புயல்களாலும் இரண்டு தீவுகளும் பிரிக்கப்படுகின்றன. கடைசியாக 2007இல் இவை பிரிந்தன. ஏப்ரல் 2, 2015 நிலவரப்படி இரண்டு தீவுகளும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன.[1][2] முக்கோண வடிவிலுள்ள இத்தீவின் நீளம் ஏறத்தாழ 20.5 மைல்கள் (33 கிமீ) ஆகும். 87.48 சதுர மைல்கள் (231.75 சதுர கிமீ) பரப்பளவுள்ள மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் ஐக்கிய அமெரிக்காவின் 57வது பெரிய தீவாக உள்ளது.

மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்
உள்ளூர் பெயர்: நோப்பெ
Nickname: திராட்சைத் தோட்டம், பாறை
மார்த்தாவின் திராட்சைத் தோட்டத்தின் நிலப்படம்
புவியியல்
அமைவிடம்டியூக்சு மாவட்டம், மாசச்சூசெட்சு
ஆள்கூறுகள்41°24′N 70°37′W / 41.400°N 70.617°W / 41.400; -70.617
தீவுக்கூட்டம்எலிசபெத் தீவுகள்
மொத்தத் தீவுகள்3
முக்கிய தீவுகள்2
பரப்பளவு87.48 sq mi (226.6 km2)
நீளம்20.5 mi (33 km)
உயர்ந்த ஏற்றம்311 ft (94.8 m)
உயர்ந்த புள்ளிமெனெம்சா முனை
நிர்வாகம்
ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மாசச்சூசெட்ஸ்
மாவட்டம்டியூக்சு மாவட்டம், மாசச்சூசெட்சு
மக்கள்
மக்கள்தொகை16,535 (2010)
அடர்த்தி66.2 /km2 (171.5 /sq mi)
எலிசபெத் தீவுகளுடன் மார்த்தாசு திராட்சைத் தோட்டத்தின் வான்காட்சி

ஒளிப்படத் தொகுப்பு தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. "Spring Gale Roars Through Island, Norton Point Is Breached". பார்க்கப்பட்ட நாள் 2015-04-03.
  2. "Land Meets Land; Norton Point Breach Closes". பார்க்கப்பட்ட நாள் 2015-04-03.