மார்த்தோசைட்டு

யுரேனைல் செலீனைட்டு கனிமம்

மார்த்தோசைட்டு (Marthozite) என்பது Cu(UO2)3(SeO3)3(OH)2·7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஆக்சைடு வகை கனிமமாகும்.[3] செஞ்சாய்சதுர படிக அமைப்பில் இந்த கனிமம் காணப்படுகிறது. 1894-1962 காலத்தில் வாழ்ந்த பெல்சிய நாட்டு கனிமவியலாளர் ஐமே மார்த்தோசின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.[2]

மார்த்தோசைட்டு
Marthozite
கடங்காவில் உள்ள முசோனோய் படிவுகளின் மார்த்தோசைட்டு கனிமம் (அளவு: 6.2 x 5.3 x 4.0 செ.மீ)
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம் (யுரேனைல் செலீனைட்டு)
வேதி வாய்பாடுCu(UO2)3(SeO3)3(OH)2·7H2O
இனங்காணல்
மோலார் நிறை1,303.67 கி/மோல்
நிறம்பசும் பழுப்பு
படிக இயல்புகத்தி போன்றது
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{100} சமம், {010} தெளிவில்லை
மோவின் அளவுகோல் வலிமை6
ஒப்படர்த்தி4.44
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்1.780 -1.800
பலதிசை வண்ணப்படிகமைமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருந்து பச்சை மஞ்சள் நிறம் வரை
2V கோணம்39°
நிறப்பிரிகைமீமிகை
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2][3][4]

மார்த்தோசைட்டு பொதுவாக செலினியத்தைக் கொண்டிருக்கும் திக்னைட்டு கனிமத்தின் குழிகளில் காணப்படுகிறது.[2] குறிப்பாக ஆப்பிரிக்காவின் கடங்காவில் உள்ள முசோனோய் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களிலும் காணப்படுகிறது.[5]

மார்தோசைட்டு செஞ்சாய்சதுர படிக வடிவம் கொண்ட ஒரு கனிமமாகும். அதாவது ஒன்றுக்கொன்று செங்குத்தான சமமற்ற நீளங்கள் கொண்ட மூன்று அச்சுகள் உள்ளன. செஞ்சாய்சதுரம் என்பதால் ஈரச்சில் மூன்று வெவ்வேறு ஒளியியல் குறியீடுகளை மார்த்தோசைட்டு கொண்டுள்ளது.[5] திசைமாறுபாட்டுப் பண்பு கொண்டது என்பதால் ஒளியை ஒரு வேகமான கதிராகவும், ஒரு மெதுவான கதிராகவும் உடைக்கும். மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருந்து பச்சை மஞ்சள் நிறத்தில் பலதிசை வண்ணப்படிகமாக திகழ்கிறது.[6] Marthozite shows pleochroism from yellowish brown to greenish yellow.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 2.3 Webmineral data
  3. 3.0 3.1 Mindat.org
  4. "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  5. 5.0 5.1 Fleischer, M. (1970) New mineral names. American Mineralogist, 55, 533.
  6. "Marthozite". பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்த்தோசைட்டு&oldid=3618402" இலிருந்து மீள்விக்கப்பட்டது