மார்வாடிகள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

மார்வாடி அல்லது மார்வாரி மக்கள், இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கில் அமைந்த மார்வார் பிரதேசம் பகுதியை சேர்ந்த இன மக்கள் ஆவர். இவர்களது மொழி மார்வாரி மொழி ஆகும். மார்வாரி மொழி இராஜஸ்தானி மொழியோடு நெருங்கிய தொடர்புடையது. இது இந்திய ஆரிய மொழிகளில் மேற்குப் பகுதியை சேர்ந்த மொழியாகும்.

மார்வாரி
பாரம்பரிய உடையில்-மார்வாரி கணவன்-மனைவி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மார்வார் பிரதேசம், இராஜஸ்தான்
 இந்தியா-
மொழி(கள்)
மார்வாரி மொழி
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இராஜஸ்தானியர்

வணிக வெற்றிகள் தொகு

வறண்ட பாலைவனப் பகுதியை சேர்ந்த மார்வாடிகள் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம். வணிகத்தில் அதீத ஈடுபாடு கொண்ட மார்வாடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப் போரின்போது கிட்டத்தட்ட வடக்கு இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வாடிகள்&oldid=3319782" இலிருந்து மீள்விக்கப்பட்டது