மாறன் அகப்பொருள்

மாறன் அகப்பொருள் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. மாறனலங்காரம், பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்றியவரும் இவரே[1]. இந்நூல் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது. பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார். பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர். இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறன் அகப்பொருள் என்னும் பெயர் ஏற்பட்டது. இந்நூலை கி.பி 1552 ஆம் ஆண்டில் நூலாசிரியரின் ஆசிரியரான சீனிவாசசீயர் என்பவர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ததாக இந்நூலின் பாயிரத்தில் இருந்து அறிய முடிகின்றது.

அமைப்பு தொகு

  1. அகத்திணையியல் (கிடைக்கவில்லை)
  2. களவியல்,
  3. வரைவியல்,
  4. கற்பியல்,
  5. ஒழிபியல் (கிடைக்கவில்லை)

என ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் மொத்தம் 363 நூற்பாக்கள் பாடப்பட்டன. தற்போது இதன் முதல், இறுதி இயல்கள் தவிர்ந்த மூன்று இயல்கள் மட்டுமே கிடைக்கின்றன.

குறிப்புகள் தொகு

  1. இளங்குமரன், 2009. பக். 350.

உசாத்துணைகள் தொகு

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.

இவற்றையும் பார்க்கவும் தொகு

தமிழ் இலக்கணப் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_அகப்பொருள்&oldid=3300440" இலிருந்து மீள்விக்கப்பட்டது