மாறுதிசையாக்கி
மாறுதிசையாக்கி அல்லது புரட்டி அல்லது நேர்மாற்றி (inverter) என்பது, நேர்த்திசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே மாறுதிசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றக்கூடிய ஒரு ஆற்றல் மின்னணுவியல் கருவி ஆகும். நிலைமாற்றம் செய்யக்கூடிய திண்மநிலை ஆற்றல் மின்னணு உறுப்புக்களான திரிதடையம், தைரிஸ்டர் போன்றவற்றால் இது செயல்படுகிறது.
இக்கருவி ஒரு அலைத்திருத்தியின் செயல்பாட்டைத் தலைகீழாகச் செய்யக்கூடியதாகும்.