மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயண சலுகைகளை அளித்து வருகிறது.
உடல் ஊனமுற்றோர்
தொகு- ஊனத்தின் தன்மை/அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
- ஊனத்தின் தன்மை, அளவு, விகிதம் ஆகியவை 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.
- ஆண்டு வருமானம் ரூ.12,000-க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
- மேற்படி சலுகைக்கான பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்
- 12ஆம் வகுப்பு வரை ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககத்தின் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவது போல் 100 விழுக்காடு இலவச பயண சலுகை 'இணைய வழியில் வழங்கப்படுகிறது. இப்பயணச்சலுகை ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் வழங்கப்படும்.
மனவளர்ச்சி குன்றியவர்கள்
தொகு- ஊனத்தின் தன்மை/அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும்அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
- ஊனத்தின் தன்மை, அளவு, விகிதம் ஆகியவை 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.
- கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவருடன் துணைக்குச் சென்று வர அவரது உதவியாளர் ஒருவருக்கும் சேர்த்து இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
- வருமான உச்ச வரம்பின்றி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.
- 12ஆம் வகுப்பு வரை ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊனமுற்றோர்க்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவது போல் 100 விழுக்காடு இலவசப் பயணச் சலுகை இணைய வழியில் வழங்கப்படுகிறது.
பார்வையற்றவர்கள்
தொகு- மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
- பார்வையற்றவர்களுக்கு அனைத்துத் தடங்களிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்யக் கூடிய வகையில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
- பார்வையற்றவர்களுக்கு வருமான உச்சவரம்பு இன்றி இலவசப் பயணச் சலுகை ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
- பார்வையற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மாற்றுப் பயண அட்டை ரூ.10 வசூலிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவம்
தொகுஇந்த இலவசப் பயணச் சலுகைக்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதனை முழுமையாக நிரப்பி அந்தந்த பகுதியிலிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு இலவசப் பயணச் சலுகை அளிக்கப்படும். அந்த விண்ணப்பப் படிவத்துடன் கீழ்காணும் சான்றிதழ்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.
- இலவச பயணச் சலுகை பெறும் ஊனமுற்றவர்கள் மருத்துவமனை/கல்லூரி/பயிற்சிக் கூடம்/பணியிடம்/ சுயமாக வேலை செய்யும் இடம் இவற்றில் ஏதேனும் ஒருஇடத்திற்கு மட்டும் சென்று வர இலவச பயணச் சலுகைக்கு உரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
- மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் பரிந்துரை பெற்று வரவேண்டும்.
- விண்ணப்பதாரர் இலவசப் பயணச்சலுகை கோரும் விண்ணப்பத்துடன் தனது இரண்டு புகைப்பட நகல்களை
(தபால்தலை அளவு) சமர்ப்பிக்கவேண்டும்.
- வருமானச் சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்கவேண்டும்.
- மேற்படி இலவச பயணச்சலுகை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
நான்கில் ஒரு பங்கு பயண கட்டண சலுகை
தொகு- சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அனைத்துவகை ஊனமுற்றோரும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஆணை எண் :G.O. Ms. No.18