மாற்று அச்சடிப்பு

மாற்று அச்சடிப்பு அல்லது மறுதோன்றி (Offset printing) என்பது அதிகம் புழக்கத்தில் உள்ள அச்சுமுறை ஆகும்.

இவ்வகை அச்சு எந்திரத்தில் அச்சிட முதலில் எழுத்துக்களைக் கோத்து அச்சுப்பதிவம் (Artpul) தயாரித்துக் கொள்ள வேண்டும். அதைப் பிலிமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பிலிமை வேதிப்பொருள் பூசிய தகட்டிற்கு மேலாக அமைத்து அதன் வழியே சக்திமிகுந்த ஒளியைப் பாய்ச்சுவார்கள், கொஞ்ச நேரம் கழித்து அதனைக் கழுவினால், அதில் ஒளி படாத இடங்களில் உள்ள வேதிப்பொருள் கறைந்து போயிருக்கும். அதில் உள்ள எழுத்துகள், படங்கள் அப்படியே இருக்கும். இதன் மீது நீர் படியாது. ஆனால் மை ஒட்டும். மை படிந்த பகுதிகள் நேரடியாகக் காகிதத்தின் மேல் அச்சாவதில்லை. அவை ரப்பர் திரையில் அச்சாகின்றன. அதுவே மீண்டும் தாளில் பதிந்து அச்சாகும்,

வண்ணப்படங்களை அச்சிட வேண்டுமெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித் தனி பிலிம்[தெளிவுபடுத்துக] தயாரிக்க வேண்டும். அவ்வாறே தனித்தனி தகடும் அச்சிடுவதற்கென தயாரித்து அச்சிட வேண்டும்.[1]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்று_அச்சடிப்பு&oldid=3047861" இலிருந்து மீள்விக்கப்பட்டது