மாற்று ஆற்றல் மேம்பாட்டு மையம்

மாற்று ஆற்றல் மேம்பாட்டு மையம் (Alternative Energy Promotion Centre) என்பது நேபாள நாட்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சுதந்திரமாகச் செயல்படும் ஓர் அரசு நிறுவனம் ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை பிரபலப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டில் வர்த்தக ரீதியாக சாத்தியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்களை மேம்படுத்துதல் ஆகியவை இம்மையத்தின் நோக்கங்களாகும். அரசு, அரசு சாரா, தொழில் மற்றும் நிதி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது உறுப்பினர் குழுவால் மையம் நிர்வகிக்கப்படுகிறது. மாற்று ஆற்றல் மேம்பாட்டு மையம் 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் அப்போதைய நேபாள அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. தற்போது, இம்மையம் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ளது. [1]

சூரியத் தகடுகள் அமைப்பு தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு சோலார் செல்களை பயன்படுத்துகிறது என்று தி கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது. அவை இழுவிசை இழைமத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த இப்பொருளின் வலிமையை உள்ளும் வெளியுமாக உருட்டுவதன் மூலம் இயக்கலாம். பயன்படுத்தப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு இவ்வமைப்பு முழு செயல்பாட்டில் இருக்கும். இது ஒரு பெட்டியில் உள்ள நுண்வலைச்சட்டம் போன்றது. நுண்வலைச்சட்டத்தை இயக்க வேண்டிய அனைத்து கூறுகளும் அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் 24 மணிநேரமும் இதை இயக்கலாம். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.aepc.gov.np accessed on February 27, 2010.
  2. "How To Choose Solar Box". The Smart Solar Box (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2019-12-20.