மாலூசின் சோதனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாலூசின் சோதனை , (Malus' experiment ) ஒளி முனைவாக்கதினை விளக்க உதவும் ஓர் எளிய சோதனையாகும்.
சாதாரண ஒளி முனைவாக்கம் பெறாத ஒளியாகும். இச்சோதனைக்கு இரு சாதாரண கண்ணாடிகள் ஒன்றிற்கொன்று இணையா அமைக்கப்பட்டுள்ளன.
முதல் கண்ணாடியில் 45 பாகையில் விழும் ஓர் ஒளிக்கற்றை 45 பாகையில் ஒளி திருப்பம் பெற்று இரண்டாவது கண்ணாடியில் விழுகிறது. இக்கண்ணாடியில் விழும் கற்றை 45 பாகையில் விழும். 45 பாகை திருப்பப்பட்டு ஒரே தளத்தில் அமையும்.இந்நிலையில் இரண்டாவது கண்ணாடியினை மெதுவாகச் சுழற்றி, இக்கண்ணாடியிலிருந்து திருப்பட்டக் கதிர் செங்குத்தானத் தளத்தில் பெறப்பட்டால் அக்கதிரின் செறிவு படிப்படியாக க்குறைந்து சுழியாக மாறி இருக்கக் காணலாம்.இரண்டாவது கண்ணாடியில் முழு முனைவாக்கம் நிகழ்வதால் இது நிகழ்கிறது.இச்சோதனை ஒளியானது குறுக்கதிர்வுகளைக் கொண்டது என்பதனையும் காட்டுகிறது.
முனைவாக்கம்.(Polarization ) ;ஒரு கட்டி அட்டையினை எடுத்துக் கொண்டு அதில் நீளவாக்கில் ஒரு திறப்பை உண்டாக்கவும் இதன் வழியாக ஒரு மெல்லிய அதேநேரம் வலுவாக கயிற்றினை செலுத்தி ,அக்கயிற்றினை ஒரு கொக்கியில் கட்டவும்.இப்போது திறப்பு வழியாக உள்ள கயிற்றின் மறு முனையினைக் ஒர் கையில் பற்றி மேலும் கீழும் பக்கவாட்டிலும் பல கோணங்களிலும் அசைத்து அலையினை அக்கயிற்றில் உருவாக்கவும்.அட்டையிலுள்ள திறப்பிற்கு இணையான அலைகள் அட்டையினைக் கடந்து செல்வதும் மற்றயவை அட்டையால் தடுக்கப்படுவதும் தெரியவரும்.இது முனைவாக்கத்திற்கான ஓர் எளிய சோதனையாகும்.