மாளிகைபுரத்தம்மன்

பந்தளம் அரச குடும்பம் மற்றும் அய்யப்பனின் குலதெய்வம்

மாளிகைபுரத்தம்மன் (Maalikapurathamma ) என்பது சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஒரு துணை ஆலயத்தில் வழிபடும் தெய்வமாகும். சபரிமலை ஐயப்பனின் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். மாளிகைப்புரத்தம்மனை மஞ்சள் மாதா என்றும் அழைக்கிறார்கள். [1] [2]

மாளிகைபுரத்தம்மன் எனும் தேவி , பந்தளம் அரச குடும்பத்தின் குல தெய்வம் ஆவார். கிபி 8ம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து ஆரியங்காவு வழியாக வந்த‌ பாண்டியர்கள், பந்தளம் அரசை உருவாக்கினார். அவர்களது குல தெய்வமான மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆலயம் அமைக்காமல் தங்களது மாளிகையின் புரத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். இருக்கும் இடத்தின்‌ பெயரில் அம்மன் அறியப்படுவது ஒரு வழக்கம் ஆகும்.‌ (உதா: பண்ணாரி அம்மன், சோட்டாணிக்கரை அம்மன், ஆற்றுக்கால் அம்மன்) அதன்படி மாளிகையின் புரத்திலே வணங்கப்பட்ட மீனாட்சி அம்மன்,மாளிகைபுரத்தம்மன் ஆனார் . 12 வயது வரை அரண்மனையில் வாழ்ந்த அய்யப்ப சுவாமியும் இந்த அம்மனையே வணங்கி வந்துள்ளார் .

மகிஷியுடன் தொடர்புபடுத்தி கூறப்படும்‌ கதைகள் யாவும் உண்மைத் தன்மையற்றது ஆகும்.

மாளிகைபுரத்தம்மன் கோவில்

தொகு

மாளிகைபுரத்தம்ன் கோவில் சபரிமலையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.

ஐயப்பனைப் போன்றே கிட்டத்தட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாளிகைபுரத்தம்மன் கோவில் ஐயப்பன் சன்னித்தானத்திலிருந்து சில கெஜம் தொலைவில் அமைந்துள்ளது. தனது கோயிலுக்கு இடது பக்கத்தில் மாளிகைபுரத்தம்மன் ஆலயம் இருக்க ஐயப்பன் விரும்பியதாக நம்பப்படுகிறது. தீ விபத்துக்கு முன்னர், மாளிகாபுரத்தில் ஒரு பீட பிரதிஷ்டை மட்டுமே இருந்தது. மாளிகைபுரத்தம்மனின் சிலை பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஸ்வரரு தந்த்ரியால் நிறுவப்பட்டது. இங்குள்ள தேவி ஒரு சங்கு, சக்ரம் மற்றும் அபய முத்திரையை வைத்திருக்கிறார். இப்போது சிலை தங்கத் தகட்டால் மூடப்பட்டுள்ளது. இந்த கோயிலும் கடந்த ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டது, இப்போது கூம்பு கூரை மற்றும் சோபன அறை தங்கத்தால் மூடப்பட்டுள்ளது. [3]

பிரசாதம்

தொகு

இருமுடி கட்டிலுள்ள "பின் கட்டில்" உள்ள இரண்டு தேங்காய்களில், ஒன்று பம்பை ஆற்றில் உடைக்கப்பட்டு, மற்றொரு தேங்காய் மாளிகைபுரத்தம்மனுக்கு வழங்கப்படும். இருமுடி கட்டுவில் உள்ள மஞ்சள் தூள் மாளிகைபுரத்தம்மனுக்கும் வழங்கப்படுகிறது [4] தேங்காய் உருட்டல் என்பது இந்த கோவிலில் செய்யப்படும் மற்றொரு பெரிய சடங்காகும். [5] இங்கே தேங்காய்கள் தரையில் உருட்டப்பட்ட பின்னரே வழங்கப்படுகின்றன. [6] [7] அம்மனுக்கு மற்ற முக்கிய பிரசாதங்கள் குங்குமம், மஞ்சள் தூள், வாழைப்பழம் , வெல்லம், சிவப்பு பட்டு மற்றும் தேன் ஆகியவை. [8]

மாளிகாபுரம் ஊர்வலம்

தொகு

மகரவிளக்கு பூஜையின் போது, அய்யப்ப சுவாமியின் திடம்பு ஊர்வலம் மாளிகபுரத்தம்மையின் கோவிலில் இருந்து ஆரம்பம் ஆகும். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் முதல் நான்கு நாட்கள் அய்யப்ப சுவாமியின் திடம்பு , அய்யப்பனின் ஜீவசமாதியில் இருந்து பதினெட்டாம் படி வரை ஊர்வலமாக கொண்டு வரப்படும். திடம்பு என்பது அய்யப்ப சுவாமியின் முக உருவம் ஆகும். பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்படும் இந்த தங்க திடம்பில் அய்யப்ப சுவாமி மீசையுடன் காட்சி தருகிறார். இந்த ஊர்வலத்தின் போது வெட்டவிளி எனப்படும் அய்யபனுடைய நாட்டுப்புற கதைகள் பாடப்படும். ஐந்தாம் நாள் ஊர்வலமானது மாளிகைபுரத்தம்மன் கோவிலில் இருந்து சரங்குத்தி வரை நடைபெறும் . யானை மீது ஏற்றப்படும் அய்யப்ப சுவாமியின் திருமுகம் மேள தாளம்‌, சரணகோஷம் முழங்க, தீவர்திகளுடன் வெட்டவிளி பாடப்பட்டு ஊர்வலம் நடைபெறும். அதன் பிறகு தீவர்த்திகள் அணைக்கப்பட்டு அமைதியான முறையில் மீண்டும் மாளிகைபுரத்தம்மன் கோவிலை வந்தடையும். இது அய்யப்ப சுவாமி தனது பூத கணங்களை அழைத்துக் கொண்டு சன்னிதானம் வந்து சேரும் ஊர்வலம் ஆகும்.

குறிப்புகள்

தொகு
  1. http://www.vaikhari.org/malikappurathamma.html
  2. https://www.tripadvisor.com.sg/ShowUserReviews-g2282355-d2629115-r549223851-Malikkappuram_Devi_Temple-Sabarimala_Pathanamthitta_District_Kerala.html
  3. "Malikappurathamma Malikappuram Temple Sabarimala". www.vaikhari.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-02.
  4. https://www.religionworld.in/sabarimala-significance-irumudi-sabarimala-pilgrimage/
  5. http://www.vaikhari.org/malikappurathamma.html
  6. http://sabarimala.net/malikappurathamma-temple/
  7. http://www.hindudevotionalblog.com/2013/11/goddess-malikapurathamma-sabarimala.html?m=1
  8. http://www.hindudevotionalblog.com/2013/11/goddess-malikapurathamma-sabarimala.html?m=1
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளிகைபுரத்தம்மன்&oldid=3666596" இலிருந்து மீள்விக்கப்பட்டது