மாவட்டச் செயலாளர் (இலங்கை)

மாவட்டச் செயலாளர் (District Secretary) அல்லது அரசாங்க அதிபர் (Government Agent, GA) என்பவர் இலங்கையில் ஒவ்வொரு நிருவாக மாவட்டத்திற்கும் பொது நிர்வாக சேவைக்குத் தலைவராகச் செயற்படும் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரியைக் குறிக்கும். இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக 25 மாவட்டச் செயலாளர்கள் பணியாற்றுகின்றனர். இது பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பழைமையான ஒரு பதவி ஆகும்.