மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம்
மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்பது 14வயது நிறைவடைந்துள்ள அனைத்து குழந்தைகளும் கி.பி.2000க்குள் தரமான இலவசக் கட்டாயக் கல்வியை அளிக்கவேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1994-1995ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று 7 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும்.
குறிக்கோள்கள்
தொகுபள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்.,5ஆம் வகுப்பு வரை தொடர்ந்து கற்க செய்தல்,குறிப்பாக பெண்கள் ,பழங்குடியினர்.,தாழ்த்தப்பட்டோர்,நலிவடைந்தோர் தனிக் கவனம் செலுத்துதல். ஒவ்வொரு நிலையிலும் குறைந்த பட்ச கற்றல் திறன் வளர்த்து தரமான கல்வியை அளித்தல் கற்றல் சூழ்நிலையை உருவாக்கி., அடைப்படை வசதியை அளித்தல் இத்திட்டம் நாட்டில் முதலில் 43வருவாய் மாவட்டங்களும்.,இரண்டாம் கட்டமாக 70 வருவாய் மாவட்டங்களும் தொடங்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு தேசிய சராசரியை விட குறைவான மாவட்டங்கள்., அறிவொளித் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு அதன் பயனாய் கல்விக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்.
அணுகுமுறைகள்
தொகுஇத்திட்டம் செயல்படுத்த தேவையான எல்லா நடவடிக்கையும் ஒருங்கிணைந்த ஒரு முழுமையான திட்டம் மற்றும் மேலாண்மையை வடிவமைத்த்ல். மேலும் பாலின பாகுபாடு அற்ற செயலாக்க முறை குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்வி கிடைப்பதில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டுதல் கல்விச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தல் உள்ளுர் சமுதாய பங்கேற்பு முறையை வலுப்படுத்தல். பயிற்சியின் வழியாக ஆசிரியர் திறனை மேம்படுத்தல் மாணவரின் அடைவாற்றல்.,திறனை வலியுறுத்தல். மேம்பட்ட கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளின் தேவையை வலியுறுத்தல்.
மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தினால் பெற்றப் பயன்கள்
தொகு- கட்டிட வசதி
- ஒன்றிய பயிற்சி மையங்கள்
- கணிப்பொறி உபகரணங்கள்
- புதிய ஆசிரியர் நியமணம்
- விழிப்புணர்வு முகாம்
- மாற்றுப் பள்ளி வசதி
- புதிய பாடத் திட்டம்
- புதிய பயிற்சி ஏடுகள்
மேற்கோள்
தொகு- ↑ மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம். மாநிலத் திட்ட இயக்கம். pp. 1, 2.