மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் மாவட்டத்திலிருக்கும் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளைக் கண்காணிப்பதுடன் மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்கவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு உதவியாக ஒன்றிய அளவில் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் அளித்திட உதவுகிறார். மேலும் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களைப் படிக்க வைப்பதுடன் பள்ளிப்படிப்பில் இடையில் நின்ற குழந்தைகளுக்கு மறுபடியும் கல்வி வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.