மாவட்ட மட்ட ஆட்சிப் பிரிவுகள் (வியட்நாம்)
இது 2007 அக்தோபர் 11 இன் நிலவரப்படியான வியட்நாமின் மாவட்ட மட்ட ஆட்சிப் பிரிவுகளைத் (தோன்விகான் சின்சாப் குயேன்) தருகிறது. இம்மட்ட ஆட்சிப் பிரிவு, மாவட்டநிலை மாநகரங்களையும் (தான்போதிரூசு துவோசுதின், நகரியங்கள் (தி சா), ஊரக மாவட்டங்கள் (குயேன்), நகரக மாவட்டங்கள் (குவான்) ஆகியவற்றை உள்ளடக்கும். இவை மேலும் ஊரகப் பகுதிக் குமுகங்களாகவும் (சா) (குயேன் உட்பிரிவுகளும், குவான், நகரியங்களின் புறநகர்களும்) நகரகப் பகுதி சிறகங்களாகவும் (பூவோங்) (மாநகரங்களிலும் நகரியங்களிலும் அமையும் உட்பிரிவுகள்), நகரியங்களாகவும் (தித்திரான்) பிரிக்கப்படுகின்றன.
மாவட்ட மட்ட மாகாண மாநகரங்களும் நகரியங்களும் ஆக அமையும் நகரகப் பகுதிகள் 5 வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்ரில் முத மூன்று தரவரிசை வகுப்பு சார்ந்த நகரகப் பகுதிகளாக மாகாண மாநகரங்கள் அமையும்; நான்கம் வகுப்பில் நகரியங்கள் அமையும்; ஐந்தாம் வகுப்பில் மாவட்டநிலை சாராத நகரியங்கள் அமையும்.
- முதல் வகுப்பு நகரகப் பகுதி: குயேHuế மட்டும்; மற்ற முதல் வகுப்பு மாகாண மட்ட மாநகராட்சிகள் கைபோங், தா நாங், சாந்தோ என்பன ஆகும்.
- இரண்டாம் வகுப்பு நகரகப் பகுதி: வியட்திரி, காலோங், தாய் நிகுயேன், நாம்தின், வின், தாங்கோவா, குயிநோன், புவோன்மா துவோத், தாலாத், வூங்தாவு, மய்தோ, உலோங் சுயேன் போன்றன
- மூன்றாம் வகுப்பு நகரகப் பகுதி: பாசுநின், யேன்பாய், இலாங்சோன், தியேன் பியேன்பூ, தாய்பின், காதின், தோங்கோய், தாங்கை, குவாங் நிகாய்]], துய்கோவா, பிளிய்கு, பாந்தியேத், தான் ஆன், சாமவு, சோசுதிராங், சாவோலான் போன்றனவும் பிறவும்
- நான்காம் வகுப்பு நகரகப் பகுதி (நகரியங்கள் சார்ந்தன): தோசோன், உவோங்பீ, சாம்பா, சோங்கோங், பீம்சோன், சாம்சோன், கோங்லின், தோங்கா, நோயான், ஆங்கே, சாம்ரான், ஆயுன்பா, கோன் தும், பான்ராங்–தாப்சாம், பாரியா, உலோங்கான், துதாவுமோத், தாய்நின், கோகோங், பெந்திரே, திராவின், சாவுதோசு, காதியேன், விதான், பாவொலோசு, கியா நிகியா, [[தோங்கோவாய், வின்லோங், சாதேசு, நிகாபாய் பொன்றனவும் பிறவும்
- ஐந்தாம் வகுப்பு நகரகப் பகுதி: மாவட்ட மட்டமற்ற நகரியங்கள்
மாவட்ட மட்ட ஆட்சிப் பிரிவுகள் கீழே தரப்படுகின்றன: