மாவலி வாணன்

காளமேகப் புலவர் தம் பாடல் ஒன்றில் மாவலி வாணனை வசை பாடியுள்ளார்.

மாவலி வாணா! மதுரைச் சொக்கன் வாதவூரார்க்கு அளித்த பொய்க்குதிரை (நரி பரி ஆகிய குதிரை)ப் படை கொண்டவன் நீ. அவை சண்டைக்குச் செல்லுமா? நீ கையை அம்பாகக் கொண்டு உயிரினங்களைக் கொன்று தின்னும் கரும்புறத்தார்க்கு அரணாக விளங்கும் அரசன் என்று அப்பாடலில் அவர் அவனைக் குறிப்பிட்டுள்ளார். [1] [2]

மாவலி வாணன்

தொகு

இந்த மாவலி வாணன் யார் என்பதை ஔவை துரைசாமிப் பிள்ளை இப் பாடலுக்கு எழுதிய உரையில் குறிப்பிட்டுள்ளார். [3]

காலமேனார் காலத்தில் மதுரை நாட்டில் சிறப்புற்று விளங்கியவன் மாவலி வாணராயன். தந்தை "திருமாலிருஞ்சோலைமலை நின்றான் மாவலி வாணாதராயன்". அவன் மகன் "சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதராயன்" மற்றும் அவன் வழியினர். இவர்களில் ஒருவனையே காளமேகப் புலவர் பாடுகிறார் என்பது அவரது உரைக் குறிப்பு.

குடும்மியான்மலைக் கல்வெட்டு

தொகு

இந்தக் கல்வெட்டு மாவலி வாணனின் கருடக் கொடியை வியந்து போற்றுகிறது. [4] [5] மற்றொன்று அவன் தம்பி வடுகரை வென்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. [6] [7] இன்னொரு கல்வெட்டு தென்னவனை வென்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. [8] [9] பாண்டியனைத் தோல்வியுறச் செய்ததால் காளமேகப் புலவர் இவன்மீது வசை பாடினார் போலும்.

மேற்கோள்

தொகு
  1. சொக்கன் மதுரையில் தொண்டர்க்கு முன் அவிழ்ந்த
    பொய்க் குதிரை சண்டைக்குப் போமதோ - மிக்க
    கர சரணா வந்த கரும்புறத்தார்க்கு எல்லாம்
    அரசு அரண் ஆம் மாவலி வாணா

  2. தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 - பக்கம் 184
  3. PDF page 23
  4. சென்னி புலிக்கொடியும் தென்னன் கயல் கொடியும்
    மின்னும் கழல் புரையோன் வில் கொடியும் - மன்னும்
    வருசைக் கொடைத் திருமால் மாவலி வாணன்
    கரிடக் கொடிக் கொடியும் காண்

  5. P.S.I No. 674
  6. மன்னாடு பூங்கழலான் வாணர்க்கு இளங் கோமான்
    அந்நாள் வடுகு எறிந்த ஆர்வத்தால் - இன்னம்
    மீறங்கால் வேல் அண்ணல் வரும் வரும் என்று அஞ்சி
    உறங்கா வடவேந்தர் ஊர்

  7. P.S.I.No. 676
  8. இழைத்தபடி இதுவோ எங்கணா என்றன்று
    அழைத்த அழுகுரலோ யாவாம் - தழைத்த குடை
    மன்னவர் கோன் வாணன் வடிவேலால் தோற்று உடைந்த
    தென்னவர் கோன் போன திசை

  9. P.S.I. No. 678
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவலி_வாணன்&oldid=3301407" இலிருந்து மீள்விக்கப்பட்டது