மா. கருணாநிதி

மார்க்கண்டு கருணாநிதி என்பவர் கல்வியியலாளர். இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியியல் தொடர்பான ஆய்வுகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்வியியல் துறை தொடர்பாகவும் கலைத்துறை தொடர்பாகவும் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மா.கருணாநிதி. யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் தெற்கில் பிறந்தவர். கொழும்பில் வசிக்கிறார். ஆரம்பக் கல்வியை யா/அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் உயர்தரத்தை யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார். பெற்றோர் மார்க்கண்டு செல்லம்மா.

பட்டப்படிப்பு

தொகு

பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் சிறப்புப் பட்டதாரி - 1974

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா - 1984

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுகலைமாணி - 1989

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் - 2001

வகித்த பதவிகள்

தொகு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1975-1976 இல் புவியியற்றுறை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1977-1983 வரை நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும் 1991 வரைஅக்கல்லூரியிலேயே அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்விப் பீடத்தில் உதவி விரிவுரையாளராகி பேராசிரியராகப் பணியாற்றினார். 2008 முதல் 2014 வரை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • கல்விச் சமூகவியல் (2008) குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.
  • கற்றல் – கற்பித்தலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், முதற்பதிப்பு 2008, திருத்திய இரண்டாம் பதிப்பு 2013, சேமமடு பதிப்பகம், இலங்கை.
  • இலங்கையில் கல்வி அபிவிருத்தி (1992), இணை ஆசிரியர் (சோ. சந்திரசேகரன் & மா. கருணாநிதி), சூடாமணி பதிப்பு, மதுரை, இந்தியா.
  • இலங்கையில் கல்வி வளர்ச்சி, இணை ஆசிரியர் (சோ. சந்திரசேகரன் & மா. கருணாநிதி), முதற்பதிப்பு 1992 கார்த்திக் பிறிண்டேர்ஸ், இரண்டாம் பதிப்பு 1995 கவிதா பதிப்பகம், கொழும்பு.
  • இலங்கையில் கல்வி (1993), இணை ஆசிரியர் (சோ. சந்திரசேகரன் & மா. கருணாநிதி), கவிதா பதிப்பகம், மதுரை, இந்தியா.
  • மீண்டும் பயிற்றுமொழியாக ஆங்கிலம் – ஒரு விளக்கவியல் நோக்கு (2006), இணை ஆசிரியர் (சோ. சந்திரசேகரன் & மா. கருணாநிதி), அகவிழி பதிப்பு, கொழும்பு.
  • முகாமைத்துவக் கொள்கைகள் ஓர் அறிமுகம் (2008), இணை ஆசிரியர் (சோ. சந்திரசேகரன் & மா. கருணாநிதி), சேமமடு பதிப்பகம், இலங்கை.
  • அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும் (2008), இணை ஆசிரியர் (சோ. சந்திரசேகரன் & மா. கருணாநிதி), சேமமடு பதிப்பகம், இலங்கை.
  • Facets of Sri Lankan Education (2009), Co – author (S.Sandirasegaram & M.Karunanithy), KumaranPublishing house, Colombo.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • பல்லின சமூகத்தில் சனநாயகம் – டொனால்ட் எல்.ஹரோவிட்ஸ், தமிழாக்கம் : மா. கருணாநிதி, பொதுசனக் கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்கா நிறுவனம், 1995.
  • நாம் நண்பர்கள் – அனுலா டீ. சில்வா, சிங்களத்திலிருந்து தமிழாக்கம் மா. கருணாநிதி, கொடகே வெளியீடு, 2004.
  • புதிய கற்றல் செல்நெறிகள் – 1, ரோலண்ட் அபேபால, தமிழாக்கம் மா. கருணாநிதி, சாரவெளியீடு, கொட்டாவ. 2016.
  • புதிய கற்றல் செல்நெறிகள் – 2, ரோலண்ட் அபேபால, தமிழாக்கம் மா. கருணாநிதி, சாரவெளியீடு, கொட்டாவ. 2016.
  • புதிய கற்றல் செல்நெறிகள் – 3, ரோலண்ட் அபேபால, தமிழாக்கம் மா. கருணாநிதி, சாரவெளியீடு, கொட்டாவ. 2017.
  • புதிய கற்றல் செல்நெறிகள் – 4, ரோலண்ட் அபேபால, தமிழாக்கம் மா. கருணாநிதி, சாரவெளியீடு, கொட்டாவ. 2017.
  • புதிய கற்றல் செல்நெறிகள் – 5, ரோலண்ட் அபேபால, தமிழாக்கம் மா. கருணாநிதி, சாரவெளியீடு, கொட்டாவ. 2017.

விருதுகள்

தொகு
  1. மா. கருணாநிதி எழுதிய "கல்விச் சமூகவியல்" என்னும் நூல் 2008 இல் வெளிவந்த கல்வியியல், உளவியல் என்னும் வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.

வெளியிணைப்பு

தொகு

/நூலகம் தளத்தில் மா. கருணாநிதி எழுதிய நூல்கள் உள்ளன. .

/அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா என்னும் யுகபுருஷர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._கருணாநிதி&oldid=2765793" இலிருந்து மீள்விக்கப்பட்டது