மா. ஸ்ரீனிவாசன்

மா. ஸ்ரீனிவாசன் (Srinivasan Madhavachari, ஜனவரி 12, 1937- பிப்ரவரி 25, 2000) இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார்[1].

வாழ்க்கையும் கல்வியும்

தொகு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சித்தாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். சென்னையில் தியாகராயர் நகர் இராமகிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் பள்ளிப் படிப்பும், லயோலா கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பும் படித்தார். பட்டப் படிப்பில் தங்கப் பதக்கமும் வடமொழியில் முதன்மையான மாணவனாகத் தேறியமைக்காக வெள்ளிப் பதக்கமும் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கமும், சர்வதேசச் சட்டத்தேர்வில், மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறியமைக்காகத் தங்கப் பதக்கமும் பெற்றார்.

பணிகள்

தொகு
  • சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகையில், ரூல்ஸ் கமிட்டி-யின் உறுப்பினர்.
  • நீதிமன்றங்கள சம்பந்தபட்ட விசயங்களைத் தீர்மானிக்கும் குழுக்களில் தலைமை தாங்கினார்.
  • புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் முனிசிப்-நீதிபதிகள் ஆகியோருக்குத் பயிற்சியளிக்கத் திட்டம் தீட்டிய குழுவின் தலைவர்.
  • இமாச்சலபிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுகையில் 26 வகையான உயர் நீதிமன்ற செயல் முறை விதிகளை ஏற்படுத்தினார்.[2]

குறிப்புகள்

தொகு
  1. http://supremecourtofindia.nic.in/judges/bio/96_msrinivasan.htm
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்131
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._ஸ்ரீனிவாசன்&oldid=2715295" இலிருந்து மீள்விக்கப்பட்டது