மிகிர போஜன்

மிகிர போஜன் அல்லது முதலாம் போஜன் (Mihira Bhoja or Bhoja I) (கிபி 836–885) மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலப் பகுதிகளை ஆண்ட 6வது கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர் ஆவார்.

மிகிர போஜன்
ஆதி வராகன்
மிகிர போஜன்
பேரரசர் மிகிர போஜனின் சிலை, தில்லி
6வது கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர்
ஆட்சிக்காலம் அண். கிபி 836 – அண். 885
முன்னையவர் இராமபத்திரன்
பின்னையவர் முதலாம் மகேந்திரபாலன்
வாரிசு
முதலாம் மகேந்திரபாலன்
தந்தை இராமபத்திரன்
பிறப்பு {வார்ப்புரு:Place of birth
இறப்பு 885
நர்மதை ஆறு
சமயம் இந்து

விஷ்ணு பக்தர்களான கூர்ஜர வம்ச மன்னர்கள் ஆதிவராகன் எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வர். கூர்ஜர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் வராக உருவத்தை பொறித்துள்ளனர்.[1] மிகிர போஜன் காலத்தில் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, தெற்கில் நர்மதை ஆறு, வடமேற்கில் சத்லஜ் ஆறு, கிழக்கில் வங்காளம், வடக்கில் இமயமலை அடிவாரம் வரையிலும் பரவியிருந்தது.[2][3]

தெலி கோயில் சிற்பம், குவாலியர் கோட்டை

மிகிர போஜன் தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடர்களையும், வங்காளத்தின் பாலப் பேரரசையும் வீழ்த்தி தனது இராச்சியத்தை விரிவாக்கினார். [4][5]:20–21 சிறந்த இராஜதந்திரியான முதலாம் மிகிர போஜன், அண்டை நாட்டுப் பகுதிகளான தற்கால இராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களின் பெரும் பகுதிகளை வென்றார். [4][6] மிகிர போஜன், தனது ஆட்சிக் காலத்தில் கூர்ஜரப் பேரரசின் தலைநகரை கன்னோசிக்கு மாற்றினார்.

தெலி கோயிலின் நுழைவு வாயில், குவாலியர் கோட்டை

முதலாம் மிகிர போஜன் அரேபிய படையெடுப்புகளைக் கடுமையாக எதிர்த்தவர். [4].[7]

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. Satish Chandra, National Council of Educational Research and Training (India) (1978). Medieval India: a textbook for classes XI-XII, Part 1. National Council of Educational Research and Training. பக். 9. https://books.google.com/books?cd=7&id=tHVDAAAAYAAJ&dq=adivaraha+mihir+bhoj&q=adivaraha#search_anchor. 
  2. E-gazeteer-History of Etawah district
  3. Digital South Asia Library
  4. 4.0 4.1 4.2 Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D.. Atlantic Publishers & Distributors. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0027-5. 
  5. Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, ISBN 9789380607344
  6. Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D.. Atlantic Publishers & Distributors. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0027-5. https://books.google.com/books?id=cWmsQQ2smXIC&pg=PA207&dq. "Besides being a conqueor, Bhoja was a great diplomat..." 
  7. Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D.. Atlantic Publishers & Distributors. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0027-5. https://books.google.com/books?id=cWmsQQ2smXIC&pg=PA207&dq. "The king of Gurjars maintain numerous faces and no other Indian prince has so fine a cavalry." 

மேற்கோள்கள்தொகு

  • Deyell, John S. (1999), Living without Silver, Oxford University Press, New Delhi, ISBN 0-19-564983-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகிர_போஜன்&oldid=2712205" இருந்து மீள்விக்கப்பட்டது