மிகுந்த உபத்திரவக் காலம்
கிறிஸ்தவ அறுதிவிளைவியலில், மிகுந்த உபத்திரவக் காலம் அல்லது கொடிய வேதனைக் காலம் (கிரேக்கம்: θλίψις μεγάλη, thlipsis megalē) என்பது இறுதிக் காலத்தைப் பற்றிய இயேசுவின் உரைகளில் (Olivet discourse) கடைசிக் காலத்தில் நடக்கக்கூடிய அடையாளமாக அவர் கூறிய ஒன்றாகும். திருவெளிப்பாடு 7:14இல், "கொடிய வேதனை" (கிரேக்கம்: τῆς θλίψεως τῆς μεγάλης, நேரடியாக, "வேதனை, கொடிய ஒன்று") என்பது இயேசு கூறிய காலகட்டத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மத்தேயு 24: 21 மற்றும் 29 வேதனை மற்றும் துன்பம் (θλίβω) என்பவற்றை போரினாலும் முற்றுகையினாலும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் பாடுகளைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.