மிகைநிரப்பு கோணங்கள்
(மிகைநிரப்புக் கோணங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடிவவியலில் இரு கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனில் அவை மிகைநிரப்பு கோணங்கள்(supplementary angles) ஆகும். இரு மிகைநிரப்பிக் கோணங்கள் அடுத்துள்ள கோணங்களாக இருந்தால் (உச்சிப் புள்ளிகள் ஒன்றாகவும் ஒரு கரம் பொதுவாகவும் உள்ள கோணங்கள்) அவற்றின் பொதுவில்லாத கரங்கள் இரண்டும் ஒரே நேர்கோட்டில் அமையும். 135° கோணத்தின் மிகைநிரப்பு கோணம் 45° ஆகும். பொதுவாக, x° கோணத்தின் மிகைநிரப்பு கோணம் (180 -x)° ஆகும். மிகைநிரப்பிக் கோணங்கள் ஒரே நேர்கோட்டில்தான் அமைய வேண்டும் என்றில்லை. வெளியில், அவை வெவ்வேறு இடங்களிலும் அமையலாம். எடுத்துக்காட்டாக, இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் மிகைநிரப்பு கோணங்களாகும்.
முக்கோணவியல் விகிதங்கள்
தொகு- மிகைநிரப்பு கோணங்களின் சைன் மதிப்புகள் சமமாகும்.
- மிகைநிரப்பு கோணங்களின் கொசைன் மற்றும் டேன்ஜெண்ட் மதிப்புகள் அளவில் சமமாகவும் எதிர்க்குறியுடனும் அமையும்.
வெளி இணைப்புகள்
தொகு- Animated demonstration - Interactive applet and explanation of the characteristics of supplementary angles.
- Angle definition pages with interactive applets that are also useful in a classroom setting. Math Open Reference