மிக்வா அல்லது மிக்வே ( Mikva அல்லது mikveh)[1][2], யூத சமய மக்கள் நீரில் குளியல் போட்டு, உடலைச் சுத்தம் செய்யும் சடங்கு ஆகும் .பழைவாத யூதர்கள் இச்சடங்கை தவறாது கடைபிடிக்கின்றனர்.[3]

பழமைவாத யூதர்கள் இறந்த சவத்தை அடக்கம் செய்வதற்கு முன், மிக்வா குளியல் போட்டு சுத்தம் செய்கின்றனர். மேலும் பழமைவாத யூதப் பெண்கள் தங்கள் கணவருடன் பாலியல் உறவுகளுக்கு முன்னும், பின்னும் மிக்வா குளியல் போட்டு உடலை சுத்தம் செய்து கொள்கின்றனர். மாதவிடாய் அல்லது பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் மிக்வா குளியல் போட வேண்டும். சவ அடக்கச் செய்த பின்னர் பழமைவாத யூத ஆண்களும், பெண்களும் தனித்தனி இடங்களில் மிக்வா குளியல் தொட்டிகளில் மூழ்கி உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sivan, Reuven; Edward A Levenston (1975). The New Bantam-Megiddo Hebrew & English dictionary. Toronto; New York: Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-26387-0.
  2. Lauden, Edna (2006). Multi Dictionary. Tel Aviv: Ad Publications. p. 397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-390-003-X.
  3. "Concerning Ritual Purity and Cleanliness".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்வா&oldid=3849196" இலிருந்து மீள்விக்கப்பட்டது