மிங் பெருஞ்சுவர்

மிங் பெருஞ்சுவர் (Ming Great Wall) இது சீனப் பெருஞ்சுவரை கட்டிய மிங் வம்சத்தால் (1369–1644) கட்டப்பட்டது. இந்த சுவரின் உண்மையான நீளம் 6259 கிமீ (3,889 மைல்) ஆகும்.[1] நவீன காலங்களில் மிங் சுவர்கள் பொதுவாக "பெருஞ்சுவர்"" என்று அழைக்கப்பட்டலும், மிங் காலங்களில் அவை சீனர்களால் "எல்லைத் தடைகள்" என்று அழைக்கப்பட்டது.

முட்டியான்யுவில் உள்ள பெருஞ்சுவர். இதுவும் பெருஞ்சுவரின் பல பிரபலமான பிரிவுகளும் மிங் வம்சத்தின் போது கட்டப்பட்டன
மிங் வம்சத்தால் கட்டபட்ட பெருஞ்சுவர். சீனப் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

ஆரம்பகால மிங் சுவர்கள்

தொகு

1368 ஆம் ஆண்டு, காங்க்வ் பேரரசர் (ஜீ யுவான்சாங் காலம்.1368-98) மிங் வம்சத்தை துவங்க சீனாவிலிருந்து மங்கோலிய தலைமையிலான யுவான் வம்சத்தை வெளியேற்றினார். மங்கோலியர்கள் மங்கோலியாவுக்கு ஓடிவிட்டனர். ஆனால் பல போர்களுக்குப் பிறகும் மங்கோலியப் பிரச்சினை நீடித்தது.[2] பேரரசர் காங்க்வ் தனது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், ஒரு எல்லைக் கொள்கையை கற்பனை செய்தார். அங்கு வடக்கு எல்லையில் உள்ள படைகள் சீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தன. இந்த நோக்கத்திற்காக அவர் எட்டு வெளிப்புற படைப்பிரிவுகளை அமைத்தார். மேலும், பாதுகாப்புக்கு மிகவும் பொருத்தமான கோட்டைகளின் உள் கோடு அமைத்தார். உள் கோடு மிங் பெருஞ்சுவருக்கு முன்னோடியாக இருந்தது.

தொழிலாளர்கள்

தொகு

மிங் வம்சத்தின் போது இந்த சுவரைக் கட்டியவர்களில் எல்லைக் காவலர்கள், விவசாயிகள் மற்றும் குற்றவாளிகள் என மூன்று முக்கிய குழுக்கள் இருந்தன. பெருஞ்சுவர் கட்டும் காலத்தின் முடிவில், திறமையான கைவினை கலைஞர்கள் சுவர் கட்டுபவர்களின் முக்கிய குழுவாக இருந்தனர். [3]

முத்தைய மிங் வம்சங்களைப் போலவே, தற்போதைய மிங் அரசாங்கமும் அதிகாரிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த விவசாயிகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பெருஞ்சுவரில் வேலை செய்ய நியமித்தனர். விவசாயிகள் எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார்கள் அல்லது அவர்கள் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் உழைப்பு பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாக கூறபடுகிறது.

பெருஞ்சுவர் கட்டுபவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் பரிதாபமானவை. பெரும்பாலும் ஆபத்தானவையும் கூட. பெருஞ்சுவருக்குப் பயணம் செய்வதும் ஒரு ஆபத்தான பயணமாகும். அதில் பலர் இறந்திக்கிறார்கள். இந்த கடினமான பயணத்தில், உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்குவதும் மிகவும் கடினமாகும். பெருஞ்சுவரில் தொழிலாளர்கள் "மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளில்" வாழ்ந்தனர். அவர்களில் பலர் நோய் பரவலால் இறந்தனர். அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் நம்பமுடியாத அளவிற்கு துண்பங்கள் அனுபவித்தனர். அதனால்தான் பலர் பெருஞ்சுவரை "உலகின் மிக நீளமான கல்லறை" என்று அழைக்கின்றனர்.

நுட்பங்கள்

தொகு

இந்த சுவர் உருவாக்க பல நுட்பங்கள் பயன்படுத்தபட்டடன. மிங் மூந்தைய வம்சங்களைப் போல மண், கல், மரம் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இவர்கள் கூடுதலாக செங்கல் மற்றும் ஓடுகளையும் அதிக அளவு பயன்படுத்தினர். குறிப்பாக கடுமையான நிலப்பரப்பு உள்ள பகுதிகளுக்கு இது அந்த நேரத்தில் சீனாவில் ஓரு புதிய நுட்பமாக இருந்தது.

முற்றுகை நுட்பங்கள்

தொகு

மங்கோலிய வடக்கு யுவானக வம்சத்தின் ஆயிரம் ஆண்களை கொண்டு ஒரு படையை உருவாக்கி அவர்களை பெருஞ்சுவர் கட்டும் பணிக்கு அனுப்பியது.

மதிப்பீடு

தொகு

மிங் வம்சத்தின் வீழ்ச்சியில் சுவரின் பங்கு பற்றிய கருத்துகளும் குறப்படுகின்றன. ஆர்தர் வால்ட்ரான் மற்றும் ஜூலியா லோவெல் போன்ற வரலாறு ஆசிரியர்கள் சீனாவைப் பாதுகாப்பதில் மிங் வம்சத்தினர் இறுதியில் தோல்வியை சந்தித்ததாக கூறுகின்றனர். இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சுவர் கட்டும் பணியை விமர்சிக்கின்றனர். இருப்பினும் சுயாதீன அறிஞர் டேவிட் ஸ்பின்ட்லர் குறிப்பிடுகையில், சுவர் ஒரு சிக்கலான வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்ததால், "சமமற்ற குற்றச்சாட்டை" பெற்றது. ஏனெனில் இது கொள்கையின் மிகத் தெளிவான நினைவுச் சின்னம்.

மேற்கோள்

தொகு
  1. பிபிசிhttp://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8008108.stmபார்வை நாள் ஏப்ரல் 20,2009
  2. Mote 1999, ப. 563.
  3. https://www.worldcat.org/issn/0030-5197
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிங்_பெருஞ்சுவர்&oldid=3062414" இலிருந்து மீள்விக்கப்பட்டது