மிசியோ காகு

மிசியோ காகு ( Michio Kaku 24 சனவரி 1947) என்பவர் சப்பானிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார். தெரியியலிலும், எதிர்கால அறிவியல் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டு அறிவியல் கருத்துகளைப் பரப்பி வருபவர். தெரியியல் தொடர்பான பல   நூல்கள் எழுதியிருக்கிறார்.  இணையத்திலும் வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார். வானொலி, தொலைக்காட்சிகளில் பேசி வருகிறார்.  பிபிசி, டிஸ்கவரி சேனல், ஹிஸ்டரி சேனல், சயன்ஸ் சேனல் போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றி தம் அறிவியல் கருத்துக்களைப் பேசி வருகிறார்.

மிசியோ காகு

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

மிசியோ காகு அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில், சாண் ஓசே என்ற நகரில் பிறந்தார்.[1] இளமைக் காலம் முதல் தெரியியல் அறிவியலில் ஈடுபாடு கொண்டார். நியூ மெக்சிகோவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் அறிவியல் அறிஞரான எட்வார்ட் டெல்லர் என்பவரைச் சந்தித்து அவருடைய கவனத்தையும் அன்பையும் பெற்றார்.  எர்ட்ஸ் பொறியியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது.  ஆர்வர்டு பல்கலைக்கழக்தில் பயின்று 1968 இல் பட்டம் பெற்றார்.   1972 இல்  பெர்கிலியில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. வியட்நாம் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் அமெரிக்கப் படையில் பணி புரிய வாய்ப்புக் கிடைத்ததால் அதற்கான பயிற்சியைக்  காகு பெற்றார்.[2]

அறிவியல் பணிகள்

தொகு

குவாண்டம் மெக்கானிக்சு என்ற  பகவு விசையியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார்.[3][4] பிரின்சுடன் பல்கலைக்கழகம் மற்றும் நியூ யார்க்குப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் 1973 முதல் 1990 வரை வருகையராகவும்  உறுப்பினராகவும் இருந்தார். நியூயார்க்கில் உள்ள சிட்டி கல்லூரியில் கோட்பாட்டு அறிவியல் பேராசிரியராக இருக்கிறார். பிசிக்கல் ரிவ்யூ போன்ற அறிவியல் இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறார்.   காகு அறிவியலை மக்களிடையே பரப்பியவர் என்ற பெருமையை ஈட்டியுள்ளார்.[5]

எழுதிய நூல்கள்

தொகு
  • பியாண்ட் ஐன்ஸ்டின் (1987)
  • ஹைப்பர் ஸ்பேஸ் (1994)
  • விசன்ஸ் (1998)
  • ஐன்ஸ்டின் காஸ்மாஸ் (2004)
  • பாரல்லல்  வர்ல்ட்ஸ் (2004)
  • பிசிக்ஸ் ஆப் தி இம்பாசிபில் (2008)
  • பிசிக்ஸ் ஆப் தி  பியூச்சர் (2011)
  • தி பியூச்சர் ஆப் தி மைண்ட் (2014)

மேற்கோள்

தொகு
  1. Michio Kaku – Time: 3 – Earthtime, BBC MMIV
  2. Kaku, Michio (1994). Hyperspace: a scientific odyssey through parallel universes, time warps, and the tenth dimension. Oxford University Press US. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-508514-0.
  3. Kaku, Michio. "Ghost-free formulation of quantum gravity in the light-cone gauge." Nuclear Physics B 91.1 (1975): 99–108.
  4. Kaku, M., P. K. Townsend, and P. Van Nieuwenhuizen. "Gauge theory of the conformal and superconformal group." Physics Letters B 69.3 (1977): 304–308.
  5. "Notable books of 1994". த நியூயார்க் டைம்ஸ். December 4, 1994. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9C02E7DA1630F937A35751C1A962958260&sec=&spon=&pagewanted=22. பார்த்த நாள்: 20 September 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசியோ_காகு&oldid=2907298" இலிருந்து மீள்விக்கப்பட்டது