மிடில்செக்ஸ்

மிடில்செக்ஸ் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புடைய மாகாணமாக உள்ளது. தற்போது இந்த மாகாணத்தின் பெரும்பாலானப் பகுதிகள் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனின் பரந்த நகர்ப்புற பகுதியில் தான் உள்ளது. இதன் பகுதிகள் இப்போது பெரும்பாலும் கிரேட்டர் லண்டனின் மாவட்டத்திற்குள் உள்ளது.இந்த மாவட்டத்தின் சிறிய பிரிவுகள் மற்ற அண்டை மாகாணங்களில் உள்ளன. மிடில்செக்ஸ் 1965 ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமான மாகாணமாக இருந்தது. இது ஆங்கிலோ-சாக்சான் அமைப்பில் நிறுவப்பட்டது. இது மத்திய சாக்சன்களின் பரப்பிலிருந்து தனி மாகாணமாக நிறுவப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Middlesex | historical county, United Kingdom", Encyclopedia Britannica (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிடில்செக்ஸ்&oldid=2530675" இலிருந்து மீள்விக்கப்பட்டது