மிடில்டவுன், ஒகையோ
மிடில்டவுன் நகரம் தென்மேற்கு ஒகையோவில் பட்லர், வாரன் கவுண்டிக்கு இடையே அமைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கணக்குப்படி இதன் மக்கள்தொகை 50,987. இந்நகரம் சின்சினாட்டி பெருநகர எல்லைக்குள் அமைந்துள்ளது. சின்சினாட்டி நகரிலிருந்து வடகிழக்கே 29 மைல்கள் தொலைவிலும் டேடன் நகரிலிருந்து தென்மேற்கே 20 மைல்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
லெமன், டர்டில்கரீக், பிராங்ளின் டவுன்சிப்களை தொடர்ந்து மிடில்டவுன் பிப்ரவரி 11, 1833 அன்று ஒகையோ சட்டமன்றத்தில் சேர்க்கப்பட்டது. , 1886இல் நகரமாகியது. அரம்கோ என்று முன்பு அழைக்கப்பட்ட ஏகே இரும்பு பிடிப்பு நிறுவனம் இந்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த இரும்பாலை 1900 ஆம் ஆண்டு உருவாகியது. இவ்வாலையின் அலுவலகங்கள் 2007 ஆம் ஆண்டு அருகிலுள்ள வெசுட் செசுட்டர் டவுன்சிப்பிற்கு நகர்த்தப்பட்டாலும், இரும்பாலை இன்னும் மிடில்டவுனிலேயே செயல்படுகிறது. ஊக் பீல்ட் முனிசிபல் வானூர்தி நிலையம் இந்நகரில் அமைந்துள்ளது. முன்பு வணிகரீதியாக செயல்படும் வானூர்திகள் இந்நிலையத்தை பயன்படுத்தின, இப்போது வணிகரீதியில் செயல்படாத வானூர்திகள் பயன்படுத்துகின்றன. மயாமி பல்கலைக்கழகத்தின் வட்டார வளாகம் இங்கு அமைந்துள்ளது. 1957 ஆம் ஆண்டு மிடில்டவுன் ஆல் அமெரிக்கா சிட்டி எனும் விருதை பெற்றது.
வரலாறு
தொகுசொற்பிறப்பு
தொகுநகரின் நிறுவனர் இச்டீபன் வெய்ல் தான் இப்பெயரை வைத்தார் என்று நம்பப்படுகிறது, ஆனால் ஏன் என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. வெய்ல் நியூ செர்சியின் மிடில்டவுன் நகரத்திலிருந்து வந்ததால் அப்பெயரை வைத்திருப்பார் என்று ஒரு வரலாற்று அறிஞர் கூறுகிறார். மற்றொருவர் படகில் பயணப்படக்கூடிய பெரு மயாமி ஆற்றின் நடுப்பகுதியில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார். சின்சினாட்டிக்கும் டேடனுக்கும் நடுவில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கும் என்ற கருத்தும் உலவுகிறது. இந்நகருக்கு நியூ செர்சிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் வந்து குடியேறிய டேனியல் டூடியே முதலில் குடியேறியவர்.
நிலவியல்
தொகுஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் படி இந்நகரின் மொத்த பரப்பளவு 26.43 சதுர மைல்கள், இதில் 26.19 சதுர மைல்கள் நிலப் பகுதி 0.24 சதுர மைல்கள் நீர்நிலை ஆகும்.[2] பெரு மயாமி ஆற்றின் கரையில் மிடில்டவுனும் இதன் எல்லைகளாக மேடிசன், பிராங்ளின், மான்ரோ, டிரன்டன்,லிபர்ட்டி டவுன்சிப்கள் உள்ளது
மக்கள் தொகை
தொகுவார்ப்புரு:US Census population
2020, மக்கள் தொகை கணக்கு
தொகு2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 50,987 மக்களும் [3] 20,057 குடியிருப்புகளும் உள்ளன. சதுர மைல்லுக்கு 1,951 மக்கள் வசிக்கிறார்கள். இனரீதியாக 81.3% வெள்ளை நிறத்தவரும், 11.2% கருப்பினத்தவரும், 0.7% ஆசிய இனத்தவரும், 5.3% லத்தின் \ தென் அமெரிக்க இனத்தவரும் 0.1% அவாய் இனத்தவரும், 4.1% மற்ற இன மக்களும் வசிக்கின்றனர்.
20,057 குடியிருப்புகளில் ஒவ்வொன்றிலும் சராசரியாக 2.39 மக்கள் வசிக்கின்றனர். 81% மக்கள் அதே வீட்டிலேயே குறைந்தது ஓர் ஆண்டு வசிக்கின்றனர். 85% மக்கள் பள்ளி\கல்லூரி செல்பவர்கள். 15.6% மக்கள் குறைந்தது இளங்கலை பட்டப்படிப்பு பெற்றவர்கள். 6.2% மக்கள் 6 வயதுக்குள் இருப்பவர்கள், 22.5% மக்கள் 18 வயதுக்குள்ளும் 17.2% மக்கள் அறுபது வயதை கடந்தவர்கள் 52.3% பெண்களும் 47.7% ஆண்களும் இங்கு வசிக்கின்றனர். அறுபது வயதை கடந்தவர்களில் 16.8% மாற்றுத்திறனாளிகள்.
குடியிருப்புகளின் சராசரி ஆண்டு வருமானம் $42,290, தனிமனிதரின் சராசரி ஆண்டு வருமானம் $24,184. அண்ணளவாக 22.5% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். சராசரியாக வீட்டிலிருந்து பணியிடத்திற்கு செல்ல 23.1 நிமிடங்கள் ஆகிறது. இராணுவத்துறை அல்லாத குடிசார் பணிகளில் 59.2% மக்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 54.5% பேர் பெண்கள்.
கலை, பண்பாடு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Update of Statistical Area Definitions and Guidance on Their Uses (OMB Bulletin No. 10-02)" (PDF). Statistical and Science Policy Branch, Office of Information and Regulatory Affairs, Office of Management and Budget. December 1, 2009. p. 28. Archived from the original (PDF) on January 21, 2017 – via National Archives.
- ↑ "US Gazetteer files 2010". United States Census Bureau. Archived from the original on 2012-01-25. பார்க்கப்பட்ட நாள் 2013-01-06.
- ↑ "U.S. Census website". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2013-01-06.