மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை

மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை உலகத் தர இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உதவும் ஒரு நிறுவனம் ஆகும். நவம்பர் 2005 இல், உலகின் பணக்காரர்களுள் ஒருவரான லக்சுமி மிட்டலால் இதனைத் தொடங்கினார். 2008 ஒலிம்பிக்கு சென்ற 53 விளையாட்டு வீரர்களில் 8 வீரர்கள் இந்த அறக்கட்டளையின் உதவியைப் பெற்றார்கள். இவர்களில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் குமாரும் ஒருவர்.

இந்தியாவின் விளையாட்டுத்துறை திறன் மங்கி இருக்கும் பொழுது இவ்வாறான தனியாள், வணிக முயற்சிகளே இந்தியாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வழிகோலும் என்று சில அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. How India Can Close Olympic Gap with China