மிதவை (புதினம்)

நாஞ்சில் நாடன் எழுதிய புதினம்

மிதவை என்பது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய புதினம் ஆகும். இந்நூலின் முதற்பதிப்பு 1986-ல் அன்னம் பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்தது. இந்நாவலின் முகப்பு அட்டை ஓவியம் வரைந்தவர் ஓவியர் ஜீவா.

மிதவை
நூலாசிரியர்நாஞ்சில் நாடன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்விஜயா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1986 (முதற்பதிப்பு)
பக்கங்கள்152

முன்னுரையில்

தொகு

இந்நூலுக்கான முன்னுரையில் நாஞ்சில் நாடன்,

"தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப்போல"

என்கிறார்.

பின்னட்டைக் குறிப்புகள்

தொகு

இந்நாவல் பற்றிய எழுத்தாளர் நகுலனின் கருத்து பின்னட்டையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதில்,

Midhavai is a well constructed work which has added to Nanjil Nadan's artistic effectiveness, they accent a felt experience. It may be noticed though he is not concerned with the complexity in the fictional form, the distinctive feature of modernity, his novel does not pay in its effectiveness.

எனக் குறிப்பிடுகிறார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவை_(புதினம்)&oldid=3801764" இலிருந்து மீள்விக்கப்பட்டது