மிதி அச்சு இயந்திரம்

மிதி அச்சு இயந்திரம் அல்லது தட்டு அச்சு இயந்திரம் (Platen printing press) என்றழைக்கப்படும் இயந்திரங்கள் அச்சுத் தொழிலில் பயன்படும் எந்திரமாகும். இவ்வகை எந்திரங்கள் தையல் எந்திரத்தை இயக்குவது போலவே காலால் மிதித்து இயக்கப்படுபவை. இவற்றை மின்சார மோட்டார் பொருத்தி தானாக இயங்கும் வகையிலும் இயக்கலாம்.

ப்ளேட்டன் எனப்படும் தட்டு அல்லது மிதி அச்சு எந்திரம்

அச்சுப் பதியும் முறை

தொகு

இதில் இரு இரும்புத் தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் கோர்க்கப்பட்ட அச்செழுத்துகள் நன்கு இறுக்கமாக முடுக்கப்பட்ட இரும்புச் சட்டத்தில் பொருந்தியிருக்கும். அச்சு எந்திரச் சக்கரங்கள் சுழலும்போது இது முன்னும் பின்னுமாகச் சென்று வரும். அப்போது மை உருளைகள் இதன் மீது மேலும் கீழும் ஓடி, எழுத்துக்கள் மீது மை தடவும். கிடையாக அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு தட்டில் அச்சிடவேண்டிய தாள் வைக்கப்பட்டிருக்கும். எந்திரம் இயங்கும் போது அச்செழுத்துப் பொருத்தப்பட்டிருக்கும் தட்டு தாள் மீது பதிந்து மீளும். அப்போது தாளில் அச்சுப் பதியும். அச்செழுத்துப் பலகை தாளிலிருந்து மீண்ட பின் அச்சுப்பதிந்த தாளை உடனடியாக அங்கிருந்து அகற்றிவிட்டு வேறு தாளை அங்கு அச்சிட வைக்க வேண்டும் . இவ்வாறு மணிக்கு ஆயிரம் படிகள் அச்சிடலாம்

படத்தொகுப்பு

தொகு

உசாத்துணை

தொகு

மணவை முஸ்தபா, 'இளையர் அறிவியல் களஞ்சியம்' .1995

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதி_அச்சு_இயந்திரம்&oldid=1043253" இலிருந்து மீள்விக்கப்பட்டது