மிது முகர்ஜி (நடிகை)

இந்திய நடிகை

மிது முகர்ஜி (Mithu Mukherjee) ( வங்காள மொழி: মিঠু মুখার্জী ) பாலிவுட் மற்றும் வங்காளத் திரைப்படங்களில் தோன்றிய முன்னாள் இந்திய நடிகை ஆவார்.[1][2][3][4]

மிது முகர்ஜி
பிறப்பு19 சூன் 1955 (1955-06-19) (அகவை 69)
கொல்கத்தா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1971–1990
உறவினர்கள்அனிதா குஹா (அத்தை)

அறிமுகம்

தொகு

1971ஆம் ஆண்டு சித்தா போஸ் இயக்கிய சேஷ் பர்பா என்ற பெங்காலித் திரைப்படத்தில் அறிமுகமானார். தைனன் குப்தாவின் மர்ஜினா அப்துல்லா (1973) [5][6] படத்தில் மர்ஜினா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இவர் நட்சத்திரமாக திகழ்ந்தார். நிஷி கன்யா (1973), மவுசக் (1974), ஸ்வயம்சித்தா (1975), ஹோட்டல் ஸ்னோ பாக்ஸ் (1976), பாக்யசக்ரா (1980), சாந்தி (1980) போன்ற பெங்காலி படங்களிலும் நடித்தார். துலால் குஹாவின் கான் தோஸ்த் (1976) மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.[7] பிறகு இவர் ஏழு ஆண்டுகள் திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றார்.[8] பின்னர், சந்திர பரோட்டின் மிகப்பெரிய வெற்றிகரமான திரைப்படமான ஆஷ்ரிதா (1990) மூலம் வெள்ளித்திரைக்கு திரும்பினார்.[9]

தொழில்

தொகு

மிது முகர்ஜி 1971ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படமான சித்தா போஸ் இயக்கத்தில் சேஷ் பர்பாவில் சமித் பன்ஜாவுடன் அறிமுகமானார்.[10] தைனென் குப்தாவின்மர்ஜினா அப்துல்லா (1972) படத்தில் அலி பாபாவின் பணிப்பெண் மர்ஜினாவின் பாத்திரத்தை இவர் ஏற்ற பிறகு ஒரு நட்சத்திரமாக திகழ்ந்தார்.[11] பின்னர் இவர் அசுதோஷ் முகர்ஜியின் நிஷிகன்யா (1973) படத்தில் சௌமித்ரா சட்டோபாத்யாய்க்கு இணையாக நடித்தார்.[12] 1974 ஆம் ஆண்டில், இரஞ்சித் மல்லிக்கிற்கு இணையாக அரபிந்த முகோபாத்யாயாவின் மவுசக் மட்டுமே இவரது ஒரே முயற்சியாகும். இது மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் செய்தது.[13] இவரது அடுத்த முயற்சி 1975ஆம் ஆண்டு, சுனில் பந்தோபாத்யாயின் கபி என்ற படத்தில் இரண்டாவது முறையாக தேவ்ராஜ் ராய்க்கு இணையாக இருந்தது. இது சரியான வசூலை பெறவில்லை.[14] ரஞ்சித் மல்லிக்கிற்கு ஜோடியாக பிளாக்பஸ்டர் ஸ்வயம்சித்தா மீண்டும் அந்த ஆண்டின் கடைசி வெளியீடாக இருந்தது. இது மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் செய்தது.[15]

பின்னடைவு

தொகு

1976 ஹோட்டல் ஸ்னோ பாக்ஸ் மற்றும் சந்தர் கச்சகச்சி ஆகிய இரண்டு சிறந்த திரைப்படங்களில் உத்தம்குமார் கதாநாயகனாக இல்லாவிட்டாலும் இவரது தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது. பிஜு புகான் முந்தைய படத்தில் இவருக்கு நாயகனாக நடித்தார். பிந்தைய படத்தில் சந்து முகர்ஜி நாயகனாக நடித்தார். இவர் சத்ருகன் சின்காவுக்கு இணையாக துலால் குஹாவின் கான் தோஸ்த் (1976) படத்தின் மூலம் பாலிவுட்டில்]அறிமுகமானார். இதில் ராஜ் கபூர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.[16] பின்னர், இவர் பாசு சாட்டர்ஜியின் படங்களுக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார். முகர்ஜி வினோத் மெஹ்ராவுக்கு ஜோடியாக சபெத் ஜூட் (1977) படத்தில் நடித்தார். இவரது இரண்டு பாலிவுட் படங்களும் முன்னணி பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறவில்லை.[17] 1977 ஆம் ஆண்டில், பலாஷ் பந்தோபாத்யாயின் பெங்காலி திரைப்படமான பிரதிமாவில் சௌமித்ரா சட்டர்ஜியின் முதல் மனைவியாக நடித்தார். இரண்டாவது மனைவியாக, சுமித்ரா முகர்ஜி நடித்திருந்தார்.

சொந்தத் தயரிப்பு

தொகு

1984ஆம் ஆண்டு பிரார்த்தனா திரைப்படத்தில் ஒரு பாடல் இரண்டு காட்சிகளில் விருந்தினராக தோன்றிய பிறகு, முகர்ஜி தனது சொந்தத் தயாரிப்பான ரங்கா பங்கா சந்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். படப்பிடிப்பு 50% நிறைவடைந்தது. மேலும் முகர்ஜி மற்றும் குப்தா இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் சந்திர பரோட் இயக்கத்தில் புத்துயிர் பெற்றதால் வெளியீடு ஐந்து ஆண்டுகள் தாமதமானது. வெளியீட்டில் ரங்கா பங்கா சந்த் ஆஷ்ரிதா என மறுபெயரிடப்பட்டது.[18][19]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mithu Mukherjee movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-08.
  2. "Mithu Mukherjee". www.bollywoodmdb.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  3. "Mithu Mukherjee". www.osianama.com. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  4. "Mithu Mukherjee". www.moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  5. "Forgotten Actors and Actresses of Bengali Films". www.newsonindiancelebrities.in. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  6. "Swarming syndrome". oldfilmsgoingthreadbare.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  7. "Shesh Parba (1971) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. Archived from the original on 28 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  8. "Du-Janay (1984) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  9. "Ashrita (1990) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  10. "Shesh Parba (1971) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. Archived from the original on 28 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28."Shesh Parba (1971) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. Archived from the original on 28 April 2018. Retrieved 28 April 2018.
  11. "Swarming syndrome". oldfilmsgoingthreadbare.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28."Swarming syndrome". oldfilmsgoingthreadbare.blogspot.in. Retrieved 28 April 2018.
  12. "Nishi Kanya (1973) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  13. "Mouchak (1974) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-05-06.
  14. "Kabi (1975) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  15. "Swayamsiddha (1975) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  16. "Khaan Dost (1976) - Review, Star Cast, News, Photos | Cinestaan". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  17. "Mithu Mukhopadhyay Biography by Chandi Mukherjee". www.gomolo.com. Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
  18. "Original Don director to play second innings". www.telegraph.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-27.
  19. "চোখে-মুখে দুষ্টুমি, কোথায় গেলেন তিনি" (in en). https://ebela.in/entertainment/mithu-mukherjee-the-chirpy-heroine-of-bengali-cinema-dgtl-1.785730. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிது_முகர்ஜி_(நடிகை)&oldid=4115344" இலிருந்து மீள்விக்கப்பட்டது