மின்காந்த அலைப்பரவல்

மின்காந்த அலைகள் பரவும் விதம், அலைகளின் தன்மைகள் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை சார்ந்துள்ளது. புவியின் வளிமண்டலத்தில் எந்த ஒரு மாற்றாமும் நிகழாமல் இருக்கும்வரை ரேடியோ அலைகள், சாதாரணமாக நேர்க்கோட்டில் மட்டுமே பயணம் செய்யும். தகவல் தொடர்புக்கு ப்யன்படும் மின் காந்த நிறமாலையின் நெடுக்கங்களும் உள்ளன.

அலைபரவல் வகைகள்

தொகு

அலைகளின் அதிர்வெண்களைப் பொருந்து பரப்பும் விண்ணலைக் கம்பிக்கு ரேடியோ அலைகளின் வகைகள்:

  1. தரை அலை பரவல்
  2. வெளி அலை பரவல்
  3. வான் (ஆ) அயனி மண்டல அலை பரவல்

தரை அலை பரவல்

தொகு

தரை அலைகள் புவியின் மேற்பரப்பு பயணம் செய்யும் ரேடியோ அலைகள் ஆகும். பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ணலைக் கம்பிகள் தரைக்கு மிக அருகில் உள்ளபோது தரை அலை பரவல் நடைபெறும். நடுத்தர மற்றும் நிண்ட அலை சைகைகள் பரவுதலின் போது மட்டுமே தரை அலை பரவல் முறை முதன்மையான முக்கியத்துவம் பெறுகிறது. பகற்பொழுதில் ஏற்கப்படும் அனைத்து நடுத்தர அதிர;வெண் சைகைகளும் தரை அலைபரவலை பயன்படுத்துகின்றன.

வெளி அலை பரவல்

தொகு

புவியின் அடிவளிமண்டலத்தின் வழியே பரப்பபடும் ரேடியோ அலைகள், வெளி அலைகள் எனப்படுகின்றன. அடிவளிமண்டலம் என்பது 15 கிமீ உயரம் வரை பரவி உள்ள வளிமண்டல பகுதியாகும். வெளி அலைகள் வழக்கமாக இரண்டு பரப்பியை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. பரப்பியிலிருந்து நேரடியாக ஏற்பி முனையை அடையும் பகுதி.
  2. புவிபரப்பினால் எதிரொளிக்கப்பட்டு பின்னர; ஏற்பியை அடையும் பகுதி.

குறிப்பாக 30 மெகா ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்கள் கொண்ட அலைகளைப் பரப்புவதற்கு ”வெளி அலை” பரவல் முறை பொருத்தமானதாக உள்ளது.

வான் அலை (அ) அயனி மண்டல அலை பரவல்

தொகு

வளி மண்டலத்தின் மேற்பகுதியில் அயனி மண்டலம் உள்ளது. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சு, ஆற்றலை அதிக அளவு உட்கவர்ந்துக் கொள்வதால் இப்பகுதி வெப்பபடுத்தப்பட்டு அயனியாக்கம் அடைகிறது.அயனியாக்கப்பட்ட இப்பகுதி கட்டற்ற எலக்ட்ரான்கள் நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள்து.

விண்ணலைக் கம்பியிலிருந்து தரையுடன் அதிக கோணத்தில் சிற்றலை வரிசையில் உள்ள ரேடியோ அலைகள், வளிமண்டலத்தின் ஊடே சென்று மேற்புற வளிமண்டல பகுதியான அயனியாக்கப்பட்ட பகுதியுடன் எதிர;ப்படுகிறது. உகந்த நிலையில் ரேடியோ அலைகள் அயனியாக்கப்பட்ட பகுதியுடன் வெவ்வேறு இடங்களில் விலகல் அடைவதால் அவை கீழ்நோக்கி வளைக்கப்பட்டு புவியின் தொலைவில் உள்ள இடத்தை அடைகின்றன.இது போன்ற ரேடியோ அலைகள்”வான் அலை ”என்றழைக்கப்படுகிறது.இந்த அலை பரவல் ”வான் அலை அல்லது அயனி மண்டல அலைபரவல்” என்றழைக்கப்படுகிறது. அயனி மண்டலத்தால் மின் காந்த அலைகள் எதிரொளிக்கப்படுதல்:

அயனி மண்டலத்தினுள் நுழையும் மின் காந்த அலைகள் அயனி மண்டலத்தால் எதிரொளிக்கப்படுகின்றன. உண்மையில் ,இதில் நடைபெறும் செயல் விலகலே ஆகும். அயனிமண்டலதின் வெவ்வேறு ஏடுகளில் ஒளிவிலகல் எண்கள் மாறிலியாக இருப்பதில்லை. இது எலக்ற்றான் அடர;த்தி மற்றும் படுகின்ற அலையின் அதிர;வெண் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. அயனியாக்க அடர;த்தி அதிகரிப்பதால், குறிப்பிட்ட அடுக்கினை குறிப்பிட்டதொரு கோணத்தில் அலை நெருங்கும் போது, அவ்வடுக்கின் ஒளிவிலகல் எண் குறைகிறது. எனவே அலையானது படிப்படியாக குத்துக்கோட்டில் இருந்து மென்மேலும் வளைந்து விலகி செல்கிறது. எலக்ற்றான் அடர;த்தி அதிகமாக உள்ள போது விலகி கோணம் தொண்ணூறு டிகிரியாக மாறும். அதன் பிறகு அலையானது புவியை நோக்கி செல்லும்.

தாவு தொலைவு

தொகு

வான் அலை பரவுவதில், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு பரப்பும் புள்ளியிலிருந்து ஏற்கும் புள்ளி வரை பரப்பின் வழியே உள்ள குறைந்தபட்சத் தொலைவு, தாவு தொலைவு” எனப்படும்.

தாவு மண்டலம்

தொகு

தரை அலை ஏற்பு இல்லாத புள்ளிக்கும் வான் அலை முதலாவதாக எந்த புள்ளியில் ஏற்படுகிறதோ அந்த புள்ளிக்கும் இடைப்பட்ட பகுதி ”தாவு மண்டலம்” எனப்படும்

முடிவுரை

தொகு

தகவல் தொடர்பு நோக்கத்திற்காக மின் காந்த நிறமாலையில் உள்ள ரேடியோ அலைகள் மற்றும் மைக்ரோ அலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிக சமீப காலத்தில் செயற்கை கோள்கள் மற்றும் ஒளி இழை ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பானது கணினி மற்றும் இதர தரவு தகவல் தொடர்புக்கு அதி முக்கியத்துவம் அளித்து விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காந்த_அலைப்பரவல்&oldid=2744715" இலிருந்து மீள்விக்கப்பட்டது