மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை, மாதேபுரா

பீகார் மாநிலம் மாதேபுராவில் செயல்படும் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலையானது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டாம் நிறுவனமும், இந்திய ரயில்வே நிறுவனமும் கூட்டாக துவங்கியிருக்கும் தொழிற்சாலையாகும். மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய 12,000 குதிரை திறன் கொண்ட மின்சார ரயில் என்ஜின்களை (WAP-12) தயாரிப்பதே இந்த தொழிற்சாலையின் பிரதான திட்டமாகும்.

அக்டோபர் 11, 2017 தனது உற்பத்தியை துவங்கிய இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி 10 ஏப்ரல் 2018 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். [1]

தனது 50வது ரயில் என்ஜினை டிசம்பர் 2020 ஆம் ஆண்டிலும் [2] மற்றும் 100 வது ரயில் என்ஜினை மே 2021 ஆம் ஆண்டிலும் [3] தயாரித்தது. இந்திய ரயில்வேயுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி 11 ஆண்டுகளில் 800 அதிவேக WAP-12 என்ஜின்களை தயாரித்து வழங்குவதே இத்தொழிற்சாலையின் இலக்காகும்.

மேற்கோள்கள் தொகு