மின்னணு சேவைகள்

மின்னணு சேவைகள் (E-services (electronic services) ) என்பது தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் சேவைகளைக் குறிப்பதாகும். இதில் மூன்று முக்கியக் கூறுகள் உள்ளன. அவையாவன மின்னணு சேவை வழங்குபவர், சேவைகளைப் பெறுபவர் மற்றும் சேவை வழங்கப்பயன்படுத்தப்படும் நிலையங்கள் (தொழிநுட்பங்கள் முதலியன). அரசு மற்றும் பொது நிறுவனங்கள் இங்கு சேவை வழங்கப்படுபவர்களாகவும் பொதுமக்கள் அல்லது வணிகர்கள் இங்கு சேவைகளைப் பெறுபவர்களாகவும் உள்ளனர். தொலைக்காட்சி, திறன்பேசி மற்றும் அழைப்பு மையங்கள் ஆகியவற்றை விட இனையத்தின் மூலமே இவ்வாறான சேவைகள் அதிகம் வழங்கப்படுகின்றன.[1]

மின்னணு சேவைகளின் முக்கியத்துவங்கள் தொகு

லு (2001) என்பவர் மின்னணு சேவைகளுக்கான முக்கியத்துவங்களாக கீழ்கண்டவற்றைக் கூறுகின்றார்.

  • இதன் மூலமாக அதிக வாடிக்கையாளர்களை அணுக இயலும்.
  • சந்தை வரம்பை விரிவுபடுத்துதல்.
  • புதிய சந்தைகளை ஏற்படுத்துவதற்கான தடையை குறைத்தல் மற்றும் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான செலவுகளையும் குறைத்தல்.
  • வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை அதிகரித்தல்.
  • வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்
  • வாடிக்கையாளர்களின் அறிவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சான்றுகள் தொகு

  1. Rowley, J. (2006) An analysis of the e-service literature: towards a research agenda. Internet Research, 16 (3), 339-359

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணு_சேவைகள்&oldid=2782145" இலிருந்து மீள்விக்கப்பட்டது