மின்னழுத்த ஒழுங்காக்கி
சீரான மின்னழுத்தத்தை தரவல்ல இலத்திரனியல் சுற்று அல்லது கருவி மின்னழுத்த ஒழுங்காக்கி (Voltage Regulator) ஆகும். குறிப்பாக சுமை மாறினாலும் வெளிப்பாட்டில் சீரான மின்னழுத்தை தரவேண்டும். இக்கருவியை மின்னழுத்த சீர்படுத்தி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
வெளிப்படும் மின்னழுத்தத்தை தேவைப்படும் மின்னழுத்துடன் ஒப்பிட்டு அவ்வித்தியாசத்திற்கேற்ப கட்டுப்பாட்டை சீர்படுத்தி அல்லது ஒழுங்காக்கி சீரான மின்னழுத்தத்தை மின்னழுத்த ஒழுங்காக்கி தரும்.[1][2][3]
ஒரு எளிய மின்னழுத்த ஒழுங்காக்கி சேனர் இருமுனையம் ஆகும். சேனர் இருமுனையம் ஒரு குறிக்கப்பட்ட மின்னழுத்தத்தில் கடத்த ஆரம்பிக்கும், அதன்பின்னர் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களுக்கும் அக்குறிக்கப்பட்ட அளவை விட்டு சேனர் இருமுனையம் மாறாது. சேனர் இருமுனையங்களின் பயன்பாட்டு மின்னோட்ட அளவுக்குள் இலத்திரனியல் சுற்று அமையவேண்டும்.
நுட்பியல் சொற்கள்
தொகு- சீரான - Constant
- மின்னழுத்தம் - Voltage
- சுமை - Load
- வெளிப்பாடு - Output
- கட்டுபாடு - Control
- இருமுனையம் - Diode
- கடத்தல் - Conduct
- மின்னோட்டம் - Current
மேற்கோள்கள்
தொகு- ↑ Donald G. Fink, H. Wayne Beatty, Standard Handbook for Electrical Engineers Eleventh Edition, Mc Graw Hill, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-020974-X, page 7-30
- ↑ Guo, Min; Jin, Qingren; Yao, Zhiyang; Chen, Weidong (2020). "Analysis on the Reason of Low Voltage Problem and the Effectiveness of Voltage Regulation in a Distribution Area". IOP Conference Series: Earth and Environmental Science 440 (3): 032128. doi:10.1088/1755-1315/440/3/032128. Bibcode: 2020E&ES..440c2128G.
- ↑ Alley, Charles; Atwood, Kenneth (1973). Electronic Engineering. New York and London: John Wiley & Sons. p. 534. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-02450-3.