மின்னிறக்கம்

மின்னிறக்கம் (Discharge of electricity ) என்பது வளி அகற்றப்பட்ட குழாயில் மின்சாரம் பாய்வதைக் குறிக்கும். சாதாரண வளிம அழுத்தத்தில் மின்சாரம் பாய்வதில்லை. ஆனால் அழுத்தம் குறைக்கப்பட்டால் ,வளிமம் மின்சாரத்தினைக் கடத்தும் பண்பினைப் பெறுகிறது.ஒரு கண்ணாடிக் குழாயிலுள்ள வளி அகற்றப்பட்டு ,அதில் குறைந்த அழுத்தம் உள்ளபோது , அக்குழாயிலுள்ள இரு மின் முனைகளுக்கிடையே அதிக மி.அ.வே. இணைக்கப்பட்டால் மின்சாரம் ஒரு மின் முனையிலிருந்து மறு மின்முனைக்குப் பாய்கிறது. இதுவே மின்னிறக்கம் எனப்படுகிறது. அணு இயற்பியலில் பல சிறப்பான கண்டுபிடிப்புகளுக்கு மின்னிறக்கம் பெரிதும் துணையாக இருந்துள்ளது. எக்சு கதிர்களின் கண்டுபிடிப்பற்கும் இதுவே கரணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னிறக்கம்&oldid=2056664" இலிருந்து மீள்விக்கப்பட்டது